ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பிரசாரத்திற்காகவே அரசாங்கம் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர தேசிய ரீதியிலான நீண்டகால நாட்டின் அபிவிருத்திகளுக்கு முதலிடம் வழங்கி வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்படவில்லையென ஐ.தே. கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
சூரியன், சந்திரன் நட்சத்திரங்களை மக்களுக்கு கொண்டு வந்து தருவேன் என்று உறுதி மொழியோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வரவு செலவு திட்டத்தை முன்வைத்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கு அதிகளவு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போதும் கொடுப்பனவுகளே வழங்கப்பட்டுள்ளதே தவிர அடிப்படை சம்பளத்தில் எதுவும் இல்லை. சிறிதளவு உயர்த்தி விட்டு அதனை பெரிதுபடுத்திக் காட்டியுள்ளது.
65 இலட்சத்திற்கும் மேலதிகமான தனியார் ஊழியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான சம்பள உயர்வுகளும் வழங்கப்படவில்லை. சலுகைகள் வழங்கப்படவில்லை.
ஏன் அவர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன.
இதேபோன்று மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் பதுளையில் ஊவா தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் அரசுக்கு வாக்களிக்கவில்லை என்பதன் காரணமாக பழிவாங்கப்பட்டுள்ளனர் என்றே கூற வேண்டும்.
இவ்வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 22,500 கோடி ரூபா ஆதாயத்தை அரசு எதிர்பார்க்கின்றது. இதனை எப்படி பெற்றுக்கொள்ளப் போகின்றது?
அதற்காக வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே அடுத்த வருடம் ஜனவரி தான் இந்த வரவு - செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதனை செய்வதற்கு எப்படியும் 6 மாதம் ஜூன் மாதம் வரையாகும்.
அதன் போது அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிகள் அதிகரிக்கப்படும். மக்களின் உணவுப் பொருட்களுக்கான வரிகளும் பன்மடங்கு அதிகரிக்கும். இவ்வாறானதொரு நிலையில் மக்கள் மீது அதிக வரிச்சுமைகள் சுமத்தப்படும். இதன் மூலமே அரசு வருமானத்தை பெற முயல்கின்றது.
அடுத்த வருடம் தொடக்கம் இந்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் ரூபா 4,500வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
0 comments :
Post a Comment