இந்தத் தாக்குதலை மேற்கொண்ட தொழில்தருனர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேஷியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்குத் தெரிவித்தார்.
கலேவல புவக்பிடிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான மொஹமட் சப்ரீன் என்ற இளைஞன் 2013 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் மலேஷியாவிற்குச் சென்றுள்ளார்.
அவர் இறுதியாக மலேஷியாவில் வாகனம் கழுவும் இடம் ஒன்றில் தொழில் புரிந்துள்ளார்.
வாகனம் கழுவும் போது வாகனம் ஒன்றிற்கு ஏற்பட்ட சிறிய சேதம் ஒன்றினால் அவருக்கு உயிர்துறக்க வேண்டி எற்பட்டது.
அந்த நிலையத்தின் உரிமையாளர் இவ்வருடம் மே மாதம் 26ஆம் திகதி தாக்குல் நடத்தியுள்ளார்.
சப்ரின் உடன் தொழில்புரிந்தவர் கூறுகையில்: -
இந்த கார் கழுவும் இடத்தின் உரிமையாளர் அதிகளவில் மதுபானம் அருந்துவார். ஒருநாள் சப்ரினை வருமாறு கூறினார். வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று தொடர்பில் வினவினார். எனினும் சப்ரின் அது குறித்து கூறி மன்னிப்புக் கோரினார். எனினும் உரிமையாளளர் நன்கு மது போதையில் இருந்தமையினால் மன்னிப்பு வழங்கவில்லை. அதன் பின்னர் அவர் சப்ரினை தாக்கினார். காலை ஆறு மணியில் இருந்து மதியம் 11 அல்லது 12 மணி வரை அறையொன்றில் போட்டு தாக்கினார். அடுத்த நாள் காலையிலேயே அவரை எம்மால் காண முடிந்தது. அதன் பின்னர் நாம் அவருக்கு சாப்பிடக் கொடுத்தோம். இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் வேலைக்கு வந்த போது உரிமையாளர் மீண்டும் தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பில் நான் இரண்டு மூன்று தடவை பொலிஸாருக்கு அறிவித்தேன்.
பொலிஸார் வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சப்ரினை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது உரிமையாளர் அதற்கும் விடவில்லை. அவ்வாறு செய்தால் எம்மையும் கொலை செய்வதாக அச்சுறுத்தினார். எனவே எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை. மறு நாள் காலை 9.30 மணியளனவில் அவர் சுகயீனமுற்று காணப்பட்ட நிலையில் கதிரை ஒன்றில் அமர்த்தியபோது அவரினால் மூச்செடுக்க முடியவில்லை. அதன் போது அவரை புகைப்படம் எடுத்தேன். நன்றி news1st
0 comments :
Post a Comment