பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதிகளும்,பாலங்களும் அமைக்கும் திட்டத்திற்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் 31 இலட்சம் ரூபாச்செலவில் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் முன்மொழிவின் பிரகாரம் நான்கு வீதிகள் கொங்ரீட் வீதிகளான நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிமை மாலை நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பம் செய்து வைத்தார்.
வெள்ளம் தேங்கி நிற்கும் மிகவும் மோசமான நிலையில் உள்ள ஆசைத்தம்பி வீதி,பெரியதம்பிரான் கோவில் வீதி,பரமானந்தம் வீதி,அக்கரைப்பற்று 1ஆம் குறுக்கு தெரு ஆகிய வீதிகள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment