கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை அமர்வு பகிஷ்கரிப்பு - அங்கு நடப்பதுதான் என்ன?


கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபை உறுப்பினர்களால் மாதாந்த அமர்வு பகிஷ்கரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சபை அமர்வு பகிஷ்கரிப்பு தொடர்பான எழுத்து மூல அறிவித்தல் உரிய அதிகாரிகளுக்கு சபையின்  உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக சபையின் வரவு செலவுத்திட்ட முதல் வாசிப்பு இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தோற்கடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேற்படி சபை ஆளும் தேசிய ஐக்கிய முன்னணியின் அதிகாரத்திற்குற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கௌரவ உறுப்பினர்கள்,
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,
ஓட்டமாவடி.

பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்,
திருகோணமலை.

சபை அமர்வினை பகிஷ்கரித்தல்.

மேற்படி பிரதேச சபையின் தவிசாளரினால் மிக நீண்டகாலமாக சபை பிழையாக வழிநாடாத்தப்பட்டு வருவதுடன், பிழையான முகாமைத்துவம், நிதி நடவடிக்கைகள் தொடர்பான பிழையான கையாழ்கை, கௌரவ உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீரப்படுகின்றமை என்பன குறைபாடாக காணப்படுகின்றது. 

மேற்படி பல்வேறு விடயங்கள் கடந்தகாலத்தில் சுட்டிக்காட்டப்பட்டு தொடர்ந்து வந்த வருடாந்த இரண்டு சபையின் வரவூ செலவூத்திட்ட பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டு குறித்த பிழைகள் நிவர்த்திக்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு அவை எதுவூம் உரிய முறையில் நிவர்த்திக்கப்படவில்லை என்பதனை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றௌம். 

சபையின் ஊழியர் நியமனங்கள், சபைக்குச்சொந்தமான சுமார் இரண்டு கோடிப் பெறுமதியான தன்னீர் சுத்திகரிக்கும் இயந்திரம் தொடர்பான ஆவணங்களை மறைத்தமை, சபை அனுமதி இன்றி நடவடிக்கைகள் மேற்கொண்டமை, நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட நிதியினை பிழையாக கையாண்டமை, சபைக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிழையான முறையில் கையாண்டமை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. 

இத்தகைய தவிசாலறது பிழையான நடவடிக்கைகள் சபையின் மீது மக்களது நல்லபிப்பிராயத்தை நீக்கியூள்ளதுடன் கௌரவ உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது. 

அத்தோடு ஆழும் கட்சியின் சபையாக அமைந்திருப்பதனால் தவிசாளரின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனாதிபதியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

எனவே மேற்படி விடயங்களை உடனடியாக ஆராய விசாரனைக்குழுவினை அமைத்து உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவிசாளர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன், தவிசாளர் மீதான எமது நம்பிக்கையில்லா தன்மையினையூம் தெரிவித்துக்கொள்கின்றௌம்.

இவ்வண்ணம்


01. எ.மீரான்சாஹிப்
02. எ.எல்.ஜுனைதீன்
03. எஸ்.ஐ.முஹாஜிரீன்
04. எஸ்.எ.அன்வர்
05. எல்.ரீ.எம்.புர்கான்
06. எம்.எம்.அஹ்மத் லெப்பை

பிரதிகள்: 
பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்
அதி மேதகு ஜனாதிபதி - ஜனாதிபதி செயலகம்.
ஆளுநர் - கிழக்கு மாகாணம்
செயலாளர்- உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு
செயலாளர் - கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :