மீறியபெந்த தோட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய எம்.மகேந்திரன் மற்றும் ராதா ஆகியோர் சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளனர்.
மகேந்திரன் கூறுகையில்,
காலை 7 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் 500ற்கும் மேற்பட்டோர் சிக்கியதாகவும் தனது குடும்பத்தில் 9 பேர் சிக்கியதாகவும் தெரிவித்தார்.
தானும் மண்ணுக்குள் புதைந்து பின்னர் ஒருவாறு ஓடித் தப்பியதாக அவர் கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட ராதா என்ற பெண் கூறுகையில், திடீரென மண்சரிவு வந்ததாகவும் தான் மண்ணுக்குள் புதையுண்ட போது ஆண்கள் மண்ணை அகற்றி தன்னை மீட்டதாகவும் குறிப்பிட்டார்.
நன்றி:- அததெரண
நன்றி:- அததெரண
0 comments :
Post a Comment