இலங்கையில், விற்கப்படும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இரு நிறுவனங்களின் குடிநீர் போத்தல்களுக்கு, மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெலவே, நேற்று தடைவிதித்துள்ளார். கிரிஸ்டல் (Cristal) மற்றும் கே சொய்ஸ் (கே சாய்ஸ்) ஆகிய பெயர்களையுடைய குடிநீர் போத்தல்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் குடிநீரில், மனித மலத்திலுள்ள பற்றீரியா கலந்துள்ளமை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவற்றை தடைசெய்யுமாறு நுகர்வோர் அதிகார சபை நீதிமன்றத்தில் கேட்டிருந்தது.
இதனையடுத்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதேவேளை, இந்த குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் நிறுவனத்தின் முகாமையாளர்கள் மற்றும் அந்த போத்தல்களை விற்பனை செய்வதற்காக காட்சிப்படுத்திய பல்பொருள் அங்காடி முகாமையாளர் ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment