ஒரு மனிதனிடம் ஆன்மீகம் இல்லையென்றால் அவனிடம் சிறந்த மனித பன்புகளை எதிர்பார்க்க முடியாது




பி. முஹாஜிரீன்-

ரு மனிதன் எவ்வளவுதான் வாழ்வில் உயர் நிலையை அடைந்தாலும் ஆன்மீகம் இல்லையென்றால் அவனிடம் சிறந்த மனிதப் பண்புகளையோ சமூகவியல் விழுமியங்களையோ எதிர்பார்க்க முடியாது என அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி.கே. அதிஸயராஜ் தெரிவித்தார்.

பாலமுனை கலாசார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் அணுசரனையுடன் நடாத்தப்பட்ட ஆறு மாத கால 'தஜ்வீத்' அல்குர்ஆன் ஓதற்கலை பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பாலமுனை கலாசார அபிவிருத்தி மையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஐ.ஏ. சிறாஜ் தலைமையில் இன்று (29) புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிஸயராஜ் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒவ்வொரு மார்க்கமும் நல்லதையே போதிக்கின்றன. இஸ்லாம் மனிதர்களை நல் விழப்படுத்துகின்ற ஒரு புனிதமான மார்க்கமாகும். அந்த வகையில் இங்கு போதிக்கப்பட்டுள்ள குர்ஆன் ஓதல் பயிற்சி நெறி மேலும் இம்மாணவர்களை நல்வழிப்;படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நமது சமூகத்திலுள்ள பலர் ஆன்மீக வாழ்வை விட்டும் தூரமான நிலையில் வாழ்ந்து கொண்டிரக்கிறார்கள். அதனால் நாம் இன்று அமைதி, நிம்மதி இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்கள் குர்ஆனை அழகிய முறையில் ஒதவேண்டியது இன்றியமையாததாக இருந்தும், அதில் அநேகமானோர் பொடுபோக்குத்தனம் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். அப்படியான ஒரு நிலை உருவாகியதனால்தான் இன்று பல இன்னல்களுக்கு சமூகம் முகம்கொடுக்கின்றது.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் மன மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது மன மகிழ்ச்சியைத் தருகிறது. இதனை ஏற்பாடு செய்த அமைப்பினருக்கும் இப்பயிற்சி நெறியை முன்னின்று நடாத்திய கலாசார உத்தியோகத்தருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கின்றென் என்றார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசியத் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை, கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.எம். அம்ஜத், கலாசார நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ரி.எம்.றிம்ஸான், பிரnதுச சபை உறுப்பினர் எம்.எல்.எம்.பாரீன், கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன், கலாபூஷணம் பாலமுனை பாறூக் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற்கலை பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 16 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், புனித அல் குர்ஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் புதிய தேசியத் தலைவராக கிழக்கு மாகாணத்திலிருந்து முதற் தடவையாக தெரிவு செய்யப்பட்ட ஓய்வபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ. உதுமாலெவ்வை பாலமுனை கலாசார அபிவிருத்தி மையத்தினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :