சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள்- அல்-ஹதீஸ் விளக்கம்

முனாப் நுபார்தீன்-

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் -02)


றைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)

அல்-ஹதீஸ் விளக்கம் தொடர் 01 ல் மேற்படி நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸின் முதல் பகுதியாகிய சுத்தம் ஈமானின் பாதியாகும் என்பது பற்றி விளக்கி இருந்தோம் எனவே இந்த 02ம் தொடரில் அதன் இரண்டாவது அம்சமாகக் கூறப்பட்டுள்ள இறைதியானம் பற்றி பார்ப்போம்.

இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும்.)

1. இந்த நபி மொழியின் மேற்படி கூற்று அல்லாஹ்வைப் புகழ்தல் துதித்தல் போன்ற உயரிய வார்த்தைகளுக்கு உயர்ந்த கூலியை உத்தரவாதப்படுத்திpயுள்ளது.

2. அந்த வகையில் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒரு வார்த்தை மறுமை நாளில் ஒரு அடியானின் தராசியை பாராமாக்குகிறது.

3. அல்லாஹ் எம்மீது சொரிந்துள்ள உள்ளக வெளியக அருள்களுக்காக அவனைப் போற்றிப் புகழ்ந்து பரிசுத்தப்படுத்துவதின் பால் ஆர்வமூட்டுகின்றது.

4. அதே போன்று சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்-ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைகளுக்கு உயர்ந்த கூலி உண்டு அதாவது அது நன்மையால் வானம் பூமிக்கு இடைபட்டவைகளை நிரப்பி விடுகின்றது.

சில அறிஞர்கள் கூறினார்கள்ää: அவை இரண்டினதும் கூலியை அளவிட்டால் அது வானம் பூமிக்கு இடைப்பட்டவற்றை நிரப்பி விடும்.

தஸ்பீஹ்: (துதித்தல்)

குறைபாடுகளை விட்டும் அல்லாஹ்வை தூய்மைப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது. இவ்விரு வார்த்தைகள் பால் ஆர்வமூட்டும் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதில் அபூ ஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இரண்டு வார்த்தைகள் அவை நாவுக்கு மிக இலகுவானவை. தராசியில் மிக பாரமானவை. அல்லாஹ்வுக்கு விருப்பமானவை. அவை தான்: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹிää சுபஹானல்லாஹில் அழீம். என்றார்கள். (புகாரிää முஸ்லிம்).

தராசி (மீஷான்) மீது விசுவாசம் கொள்வது கட்டாயமாகும்.

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான விடயம் பற்றியும் தெளிவு படுத்ததல் அவசியமாகும் அதாவது தராசியை (மீசான்) ஈமான் கொள்ளுதல் அஹ்லுஸ் ஸ{ன்னா வல்ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடாகும். அபூ ஜவ்பர் அல் தஹாவி குறிப்பிடும் போது: ( மறுமை நாளின் மீண்டெழுதல்ää செயல்களின் கூலிää காண்பித்தல்ää விசாரணைää பட்டோலை வாசிக்கப்படுதல்ää கூலி கொடுத்தலும் தண்டனை வழங்கலும்ää சிராத் (நேரான பாதையில் செல்லல்)ää தராசி (நன்மை தீமையை அளவீடு செய்தல்) ஆகியவற்றை நாம் விசுவாசம் கொள்கின்றோம்) .(தஹவிய்யா-456). இது குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறும் போது: “நாம் மறுமை நாளைக்காக நீதி எனும் தராசியை வைத்;துள்ளோம். ஒரு ஆத்மா எவ்விதத்திலும் கடுகளவேனும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. விசாரணை செய்ய நாம் போதுமானவர்கள். (அல்-குர்ஆன் : 21: 47)

இன்னும் அல்லாஹ் கூறும் போது: “எவரது தராசு கணதியாக இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். எவரது தராசு கணதியற்றதாக இருக்கின்றதோ அவர்கள் தான் தங்களது ஆத்மாக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியவர்கள். அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்-குர்ஆன் : 23;:102-103).

மேலும்: “அந்நாளில் கூலிகளை நிறுவை செய்வது உண்மையாகும். எவரது தராசு பாரமா இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் : 7 : 8).

சுன்னாவில் இதனை உறுதிப்படுத்துவதற்காக இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மறுமை நாளில் படைப்புகளுக்கு முன்பாக எனது உம்மத்திலிருந்து ஒருவனை வெளியெடுப்பான். அவனுக்கு முன்னால் 99 பதிவேடுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு பதிவேடும் அவனின் பார்வையின் நீளமாக இருக்கும். பின்னர் கூறுவான்: இதில் ஏதாவது ஒன்றை நீர் நிராகரிக்கிறாயா? எனது பாதுகாவல்களான எழுத்தாளர்கள் (பதிவாளர்கள்) உனக்கு அநீதி இழைத்தார்களா? அவன் இல்லை இறiவா எனக் கூறுவான். உனக்கு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என இறைவன் கேட்பான். அதற்கு அவன் இல்லை இறைவா என்பான். அதற்கு அல்லாஹ் அனால் உமக்கு எம்மிடத்தில் ஒரு நன்மை உண்டுää இன்று உமக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது எனக் கூறுவான். ஒரு காகித அட்டை வெளிக்கொனரப்படும்

அதில் أشهد أن لااله إلاالله وأشهد أن محمدا عبده ورسوله என்றிருக்கும். அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடிமையும் தூதுவருமாகும் என காணப்படும். நான் உமது நிறுவையைக் கொண்டுவருகிறேன் என அல்லாஹ் கூறுவான். அம்மனிதன் இந்த பதிவுகளோடு இந்த அட்டையால் என்ன ஆகப்போகின்றது? என வினவுவான். அதற்கு அல்லாஹ்: நீர் அநியாயம் செய்யப்படமாட்டீர் எனக் கூறுவான். பிறகு அந்த பதிவேடுகள் தராசின் ஒரு தட்டிலும் அந்த சிறியக் காகிதத் துண்டு ஒரு தட்டிலும் வைக்கப்படும்;. பதிவுகள் வெறுமையாகிப் போய் அட்டை பாரமாக இருக்கும். இது அல்லாஹ்வின் திருநாமத்தை விட எதுவும் பாரமாக இருக்காது என்பதனாலாகும். (அல்பானியின் ஸஹீஹான ஹதீஸ்களின் தொடர்ச்சி.)
இன்ஷா அல்லாஹ் இந்த நபி வழிச் செய்தியின் அடுத்தப் பகுதி பற்றி எமது அடுத்தத் தொடரில் பார்ப்போம். அதுவரை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களையும் அகபுற சுத்தத்துடன் அவனைத் துதித்து தூய்மைப் படுத்தி வாழ அருள் செய்வானாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :