பி.எம்.எம்.ஏ.காதர்-
சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் இன,மத,கலாசார விழுமியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய சம்மேளனம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட முகாமையாளரும், ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளருமான எச்.எச்.நஜிமுத்தீன் அவர்களின் ஆலோசனையில் மருதமுனை மத்திய சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சம்சுல்; அமான், செயலாளர் எம்.ஏ.திலிப் நௌசாட் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள அந்த மகஜரில் தெரிவித்திருப்பதாவது :-
தற்போதுள்ள கட்சி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி எதிர்காலத்தில் வரக்கூடிய தேசிய ரீதியான தேர்தல்களுக்கு முகம் கொடுக்கக்; கூடியவகையில் மிக அவசரமாக கல்முனை தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
மேலும் அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் வாக்குகளின் மூலமாகவே கிழக்கு மாகாண சபைக்கு 3வது உறுப்பினராகவும் சிங்களவர் ஒருவர் தெரிவு செய்யப்படுகின்றார். இதன் காரணமாக விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படாமல் போகின்றார் இதற்கு நிவாரணம் அளிக்கின்ற வகையில் 3வது பிரதிநிதியின் ஒதுக்கீடுகள் முஸ்லிம் பிரதேசங்களைச் சென்றடைவதற்கு ஆவணை செய்தல்.
ஐக்கிய தேசிய கட்சியானது எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கின்ற போது தேவைப்டுமிடத்து சிறுபான்மை கட்சிகளுடன் தேர்தல் கால ஓப்பந்தங்கள் செய்யும் போது முஸ்லிம் பிரதேசங்களின் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் ஆதரவாளர்ககளின் தனித்தவம,; சுயகௌரவம், அபிலாசைகள் என்பவை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
இத்துடன் அம்பாறை மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment