சார்ஜாவின் அதிவேக நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கொடூர விபத்து!

சார்ஜாவின் அதிவேக நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கொடூர விபத்தில் ஒரு இந்தியர் உட்பட 4 பேர் பலியாகினர்.

சார்ஜா இரானுவத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது இராணுவச் சீருடையை சலவைக்கு போட்டிருந்ததை மறந்து போய் தனது அன்றாட அலுவல்களில் மூழ்கிப் போனார்.

உயரதிகாரிகளின் அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் தயாரானபோது, மிடுக்கு கலையாத சீருடைகள் தன்னிடம் இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர், சலவைக்கு துணி போட்ட கடைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். 


நள்ளிரவு சுமார் 2 மணி ஆனதால், கடை மூடப்பட்டிருக்கவே, அதில் வேலை செய்யும் ஊழியர்களை தேடிச் சென்ற அவர், இருவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக செலுத்துமாறு சாரதியிடம் கூறினார்.

அதிவேகத்தில் காரை செலுத்திய சாரதி, சார்ஜா விமான நிலையம் அருகே சாலையோரமாக பழுதாகி நின்றிருந்த லொறியை கவனிக்கத் தவறிய அதே வேளையில், அந்த லொறியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிய கார், இரண்டு துண்டங்களாகியது.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த சாரதி உட்பட இருவர் தலை துண்டிக்கப்பட்டு, கண்ணாடி வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர். இராணுவ அதிகாரி உட்பட பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து, இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் பலியாகினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :