ஜக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹவினால் கொண்டு வரப்பட்ட கரட் கிழங்கில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் வெளியிட்ட பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க அந்த கரட் கிழங்கினை பரிசீலனைக்கு உட்படுத்துமாறும் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் ஜானக்க பண்டாரவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து கரட் கிழங்குகளை அப்புறப்படுத்துமாறும் அது தொடர்பான விசாரணை அறிக்கையினை சபாநாயகருக்கு சமர்ப்பிக்குமாறும் பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர் சபையில் பிரசன்னமாயிருந்த பிரதிப்படைக்கல சேவிதர் நலின் பண்டார எம்.பி. வசம் இருந்த கரட் கிழங்குகளை சபையிலிருந்து எடுத்துச் சென்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கரட் கிழங்குகளைச் காட்டி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது கரட் கிழங்குக்கு ஒப்பானது எனக் காண்பித்து உரையாற்றினார்.
அத்துடன் 2005 ஆம் ஆண்டிலிருந்து வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்ட நிவாரணம் என்றதன் பேரில் கரட் கிழங்குகளை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள ஜனாதிபதி 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கரட் கிழங்குகளை மூடை மூடையாக ஜனாதிபதி அள்ளிக் கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
நளின் எம்.பி. கரட் கிழங்குகளை காட்டி பேசிக் கொண்டிருந்த போது ஆளும் கட்சி எம்.பி.கள் இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தனர். இதன் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க உறுப்பினரால் சபைக்குள் கரட் கிழங்குகளை கொண்டு வர முடியாது. அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது. வெடிகுண்டும் இருக்கலாம். இது எமது பாதுகாப்பு பிரச்சினையாகும். ஆகவே இது குறித்து விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது வைத்தியரின் ஆலோசனைப்படி மணித்தியாலத்திற்கு ஒரு முறை கரட் கிழங்கு உட்கொள்ள வேண்டும். அதற்காகவே கரட், கிழங்கை கொண்டு வந்துள்ளேன் என்றும் நளின் பண்டார கூறினார்.
ஆளும் தரப்பினரின் இடையூறுகளுக்கு மத்தியில் உரையாற்றிய நளின் ஜயமஹ எம்.பி. தனது உரையை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் கரட் கிழங்குகளை அப்புறப்படுத்துமாறும் அது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையை சபாநாயகருக்கு சமப்பிக்குமாறும் உறுப்பினர் ஜனக்க பண்டார உத்தரவிட்டார். இதன் பின்னர் உதவி படைக்கல சேவிதர் கரட் கிழங்குகளை சபையிலிருந்து அப்புறப்படுத்தினார்.

0 comments :
Post a Comment