த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் புதன்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.
கடந்த 24ம் திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரத்தின் ஆறாம் நாளான புதன்கிழமை சூரசம்ஹார நிகழ்வு நாடு பூராகவும் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெற்றிருந்தது.
வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முரகப் பெருமான் உள் வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளி வீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது. இந்த வகையில் இவ்வாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால் யாக பூசை இடம்பெற்றது. இவ்விரத பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சொ.ரதன் குருக்களினால் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment