வட்டமடு விவகாரம்: திருக்கோவில் பாதைகளில் மாடுகளை வெட்டி அச்சுறுத்தல் - படங்கள்

ரு மாடுகளின் வெட்டிய தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் இன்று காலை அவதானிக்கப்பட்டது.

தொங்கிய பதாதையில்” எங்கள் காணிக்குள் இருந்து மாடுகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலைமைதான் உங்களுக்கும் நடக்கும். அல்லா கூ அக்பர் ”. என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி தெரியவருவதாவது;

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு மேச்சல்தiர் தரைபகுதியை விவசாயிகள் அத்துமீறி விவசாயம் செய்யமுற்படுகின்றனர் என கால்நடையாளர்கள் குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடாத்திவருகின்றனர் அதேவேளை விவசாயிகள் தங்களது காணிக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விவசாய திணைக்களம் அனுமதிவழங்கியுள்ளது என அவர்களும் போராட்டங்களை நடாத்திவருகின்றனர்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வட்டமடுமேச்சல் தரைபகுதியில் கால்நடையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையையடுத்து பொலிசார் இருசாராரையும் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என அறிவித்து இவர்களுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் திங்கட்கிழமை (27)செய்யப்பட்டது இதனையடுத்து நீதிமன்றம் இன்று புதன்கிழமை வரை இருபகுதியினரும் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டது.

இவ்வாறான நிலையில் வட்டமடு மேச்சல் தரைபகுதியில் உள்ள இரு பட்டிகளில் இருந்து இரண்டு பசுமாடுகளை பட்டியடியில் வைத்து இனம் தெரியாதோர் அதன் தலைகளை வெட்டி எடுத்துக் கொண்டுவந்து சாகாமம் வீதி நாவலடிச் சந்தியில் வைத்துள்ளனர்.

 இதனை இன்று புதன்கிழமை காலை 6.00 மணியளவில் அந்தப்பகுதிக்குச் சென்றவர்கள் கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்

இச் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :