பின் கதவால் சென்று பதவி பெறுவது எமக்கு முக்கியமல்ல, எம் சமூகத்தின் தேவைதான் முக்கியம்- ஹரிஸ் எம்.பி

இம்போட்மிரர் இணையத்தளத்தின் ஓர் அங்கமான சர்வதேச இம்போட் வானொலியில் நேற்று இரவு அரசியல் களம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள்:

பின் கதவால்
சென்று பதவி பெற்று சமுகத்துக்கு
துரோகம் செய்ய நாம் ஒரு போதும்
விரும்பவில்லை.பிரதி
அமைச்சர் பதவியை பெற
வேண்டுமென்றால் அது ஒரு பெரிய
விடயமாக இருக்க வில்லை .

பிரதி அமைச்சர்
பதவியை பெற்று எமது கட்சியை
காட்டிக் கொடுக்கும்
வேலையே நான் ஒரு போதும்
செய்யப் போவதில்லை .
தீகாம்பரம்,ராதா கிருஷ்ணன் ,பிரபா
கணேசன்
ஆகியோருக்கு பிரதி அமைச்சு பதவி
வழங்கப்பட்ட போது கூட
பிரதி அமைச்சர்
பதவியை பெறுமாறு எமக்கு
அழைப்பு விடுக்கப் பட்டது.

அரசு முஸ்லிம்கள் விடயத்தில்
நடந்து கொள்ளும் விடயம் பாமர
மகனுக்கும் புரியும் , அழுத்கம
சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் மனம்
பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில்
நாம் கள்ளத்தனமாக பதவிகளைப்
பெற்று எமது மக்களுக்கு துரோகம்
செய்ய ஒரு போதும் விரும்ப
வில்லை . 

என் மீது காழ்புணர்ச்சி கொண்டவர்கள்
எனக்கெதிராக இனணய
தளங்களை பயன்படுத்தி பொய் பிரச்சாரம்
செய்கின்றனர். 

இவ்வாறான
அறிக்கை விடுபவர்கள்
தைரியமிருந்தால் என் முன்னால்
வந்து பேசட்டும் என சவால்
விடுத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப்
போராட்டத்திற்கான காலம் கனிந்துள்ள
நிலையில் அதனை குழப்பி கட்சியை
விளவுபடுத்துவதற்கான
சதி முயற்சியே
பாராளுமன்ற உறுப்பினர்கள்
அமைச்சுப் பதவி பெறப்போகின்றார்கள்
என்கின்ற செய்திகளாகும்.
எப்படியான
செய்திகளை பரப்பினாலும்,
எமது கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும்,
சமூகப் போராட்டத்தை
முன்னடுப்பவர்களாகவும்
இருக்கின்றனர்.

கட்சிக்கு வெளியே உள்ளவர்களும்,
கட்சி என்று பதவி மோகம்
பிடித்தவர்களும் பிழையான
செய்திகளை பர0ப்ப
முனைகின்றனர்.

தலைவர் ரவூப்
ஹக்கீமுக்கு தெரியாமல்
பதவி எதையும் பெற மாட்டேன்
என்பது அவருக்கு நன்றாக
தெரியும் நான்
எமது கட்சிக்கு என்றும்
விசுவாசமாக செயல் படுபவன்
எனவும் தெரிவித்தார் . 

நான்
பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல்
காசிம். ,தௌபீக் ஆகிய மூவருடனும்
அமைச்சர் பசில் ராஜபக்ஸ
பிரதி அமைச்சரை பெறுவது
தொடர்பாக பேசிய போது தலைவர்
அந்த நேரம் நாட்டில் இருக்கவில்லை
இருந்த போதும்
தலைவருக்கு தெரியாமல்
பதவி பெறுவதை நாம் மூவரும்
பெற்றுக்கொள்ளப்
போவதில்லை என்று அந்த
கோரிக்கையை நிராகரித்தோம் .

அம்பாறை கரையோர
மாவட்டத்தை பெறுவதற்கு தடையாக
இருந்தவர் அமைச்சர் தயாரத்னாதான் என
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்
தெரிவித்தார் .

கல்முனையை துண்டாடும்
சதி வேலையை இன்றும் அவர்
செய்து கொண்டிருக்கின்றார் . கடந்த
இரண்டு வருடமாக இந்த அரசாங்கம்
வழங்காத அம்பாறை கரையோர
மாவட்டத்தை எதிர் வருகின்ற
குறுகிய காலத்துக்குள் கரையோர
மாவட்டம் வழங்கப்
படுவது என்பது கேள்விக்குறியான
விடயமாகும் .

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களும்,
பாராளுமன்ற உறுப்பினர்களும்
அதிகாரங்கள் இன்றி ஒரு சேவகனாக
மட்டுமே செயல் படுகின்றனர் . 

இந்த
காலகட்டத்தை பொறுத்த மட்டில்
கரையோர மாவட்டத்தை பெறுவதே
முஸ்லிம்களுக்கான ஒரே தீர்வாகும்
என ஹரீஸ் எம்.பீ இம்போர்ட் மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :