காணி பிரச்­சி­னையில் மாகாண சபை அதி­கா­ரத்தை பிர­யோ­கி­யுங்கள்-கிழக்கு முதல்­வரை வலி­யு­றுத்­து­கிறார் சம்­பந்தன்

திரு­கோ­ண­மலை மாவட்டம், குச்­ச­வெளிப் பிர­தேச செயலர் பிரிவில் உள்ள தென்­ன­ம­ர­வாடிப் பகுதி மக்கள், யுத்தம் முடிந்து தமது இடங்­க­ளுக்கு மீளத் திரும்­பிய பின்­னரும் தமது நிலங்­களில் விவ­சாயம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள் இல்லை. பதவி சிறி­புர கொலனி குடி­யேற்­றக்­கா­ரர்கள் இந்த மக்­களின் காணி­களில் தாங்கள் பல­வந்­த­மாக செய்கை பண்ணிக் கொண்டு, அவர்களின் வாழ்­வா­தா­ரத்தைப் பறித்து வரு­கின்­றார்கள்.
எனவே இவ்­வி­ட­யத்தில் உடன் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

இத்­த­கைய சாரப்­பட கடிதம் ஒன்றை கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும், கிழக்கு மாகாண காணி அமைச்­ச­ருக்கும், கிழக்கு மாகாண எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கும் அனுப்பி வைத்­தி­ருக்­கின்றார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன்.

காணி விவ­கா­ரத்தில் மாகாண சபைக்கு உள்ள அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிக்­கு­மாறு கிழக்கு மாகாண சபைக்கு அழைப்பு விடுக்கும் விதத்தில் இந்தக் கடிதம் அமைந்­துள்­ளது. கடி­தத்தின் முழு விவரம் வரு­மாறு:-

1.திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் வடக்கு எல்­லையில் அமைந்­துள்ள பழ­மை­யான கிராமம் தென்­ன­ம­ர­வடி.

2. 1983/84 இல் அங்கு 250 குடும்­பங்கள் குடி­யி­ருந்­தன.

3. 1984 டிசம்­பரில் இந்தக் கிராமம் தாக்­கப்­பட்­டது. சுமார் பத்துப் பேர் கொல்­க­லப்­பட்­டனர்; பலர் காய­ம­டைந்­தனர்; வீடு­களும் சொத்­துக்­களும் அழிக்­கப்­பட்­டன.

4. இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்த குடும்­பங்கள் தப்பி ஓடி, அருகில் இருந்த முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தஞ்சம் புகுந்­தன. அண்­மையில் பதவி சிறி­பு­ரவில் குடி­யேற்­றப்­பட்­ட­வர்­க­ளா­லேயே இந்தத் தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

5. நீண்ட காலம் இழு­பட்ட யுத்தம் கார­ண­மாக, மேற்­படி குடும்­பங்கள் தங்­க­ளு­டைய கிரா­மத்­துக்குத் திரும்ப முடி­ய­வில்லை. எனினும் யுத்தம் முடி­வுற்­ற­மையை அடுத்து அவர்கள் திரும்பத் தொடங்­கி­னார்கள்.

6. சுமார் 150 குடும்­பத்­த­வர்­களும் அவர்­க­ளது வம்­சத்­தி­னரும் தென்­ன­ம­ர­வா­டிக்குத் திரும்­பி­ன­ரா­யினும் அவர்கள் மிகக் கஷ்­ட­மான சூழ்­நி­லை­யி­லேயே வாழ்­கி­றார்கள். எஞ்­சிய குடும்­பங்­களும் அவர்­க­ளது பிள்­ளை­களும் இன்னும் திரும்­ப­வில்லை. அதற்குப் பிர­தான காரணம் வீடு­களோ, வாழ்­வா­தா­ரங்­களோ அவர்­க­ளுக்கு அங்கு இல்லை என்­ப­தாகும். கிரா­மத்­துக்குத் திரும்­பி­ய­வர்­க­ளுக்குக் கூட நிரந்­தர வீட்டு வசதி ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­ப­ட­வில்லை; வாழ்­வா­தா­ரங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

7. தென்­ன­ம­ர­வ­டிக்கு மீண்டு, அங்கு தற்­போது வசிக்­கின்ற குடும்­பங்கள் கூட அவர்கள் திரும்­பி­ய­வேளை தொட்டு, அவர்­களின் வயல் செய்கை விட­யத்தில் சொல்­லொணா நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்­ளன. அவர்கள் தங்கள் நிலங்­களில் பயிர்ச் செய்கை செய்­வது பதவி சிறி­புர குடி­யேற்­ற­வா­சி­களால் (கொல­ணி­யி­னரால்) தடுக்­கப்­ப­டு­கின்­றது. இந்தக் குடி­யேற்­ற­வா­சி­களில் ஒரு பகு­தி­யினர் இந்தக் காணி­களில் பல­வந்­த­மாகத் தாமே செய்கை பண்­ணு­கின்­றனர்.

8 தென்­ன­ம­ர­வ­டியைச் சேர்ந்த பலர் தங்­களின் நெற்­கா­ணி­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருப்­ப­துடன் பல தசாப்­தங்­க­ளாக அங்கு செய்கை பண்­ணியும் வரு­கின்­றார்கள். நிலம் இல்­லாத சிலர் இடப்­பெ­யர்­வுக்கு முன்னர் நிலம் வழங்­கு­வ­தற்கு தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும் அதற்­கான அனு­ம­திப்­பத்­திரம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இவர்­களுள் சில­ருக்கு தாங்கள் மீளத் திரும்பி வந்த பின்னர் அனு­ம­திப்­பத்­தி­ரத்தைப் பெற முடிந்­துள்­ளது. தெரி­வு­செய்­யப்­பட்ட எஞ்­சி­யோரால் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களைப் பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை. காணி இல்­லாத மேலும் பலர் தமது கிராம சேவை­யாளர் பிரிவில் நிலம் பெற விரும்­பு­கின்­றனர்.

9. தென்­ன­ம­ர­வடி மக்­க­ளு­டனும், பதவி சிறி­புர மக்­க­ளு­டனும் தொடர்­பாடல் மேற்­கொள்­வதன் மூலம் இந்த விட­யத்தைத் தீர்ப்­ப­தற்கு மாகாண மற்றும் மாவட்ட அதி­கா­ரிகள் பிர­யத்­தனம் மேற்­கொண்­டனர்.

10. அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருக்கும் தென்­ன­ம­ர­வ­டியைச் சேர்ந்தோர் தங்கள் நிலங்­களில் இந்த வருடம் முதல் செய்கை பண்­ணு­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லான இணக்­கத்­தோடு கடந்த வரு­டத்தில் ஓர் உடன்­பாடு எட்­டப்­பட்­டது. இந்த உறு­திப்­பாட்டின் அடிப்­ப­டையில் கடந்த வருடம், கடைசி முறை­யாக நெற்­செய்கை பகிர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

11. எனினும் தென்­ன­ம­ர­வடி மக்­க­ளுக்குத் தங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் படி சட்­ட­ரீ­தி­யா­கவும் - அதே­வேளை, கடந்த வருடம் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­யின்­ப­டியும் - தங்­களின் நிலத்தில் நெற்­செய்கை மேற்­கொள்­வ­தற்கு முழு உரித்தும் இருக்­கின்ற போதிலும், பதவி சிறி­புர, குடி­யேற்­ற­வா­சிகள் மீண்டும் ஒரு தடவை அவர்­களை அதனை மேற்­கொள்ள விடாமல் தடுக்­கின்­றார்கள்.

12. அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருப்போர் சட்­ட­ரீ­தி­யாகத் தமக்­குள்ள உரித்­துப்­படி விவ­சாயம் செய்­வ­தற்கு உதவ அதி­கா­ரிகள் விரும்­ப­வில்லை அல்­லது அவர்­களால் உதவ முடி­ய­வில்லை. சில அதி­கா­ரி­களின் செயற்­பா­டுகள் இதை விடவும் விரும்­பத்­தக்க விதத்தில் அமைந்­தி­ருக்க முடியும் என்­பதை மட்டும் குறிப்­பிட்டு, இதற்கு மேல் எதையும் இந்தச் சந்­தர்ப்­பத்தில் கூறு­வதைத் தவிர்க்­கிறேன்.

13. இந்தப் பிரச்­சினை உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­பட்டு, அனு­ம­திப்­பத்­திரம் உள்ளோர், அந்த அனு­ம­திப்­பத்­திரம் மூலம் உரித்து வழங்­கப்­பட்­டுள்ள தமது காணி­களில் சமா­தா­ன­மாக தமது நெற்­செய்­கையை ஆரம்­பித்து, தொடர்­வ­தற்கு வழி செய்­யா­விடின் அது மீண்டும் தற்­கா­லிக அல்­லது நிரந்­தர இடப்­பெ­யர்­வுக்கு வழி செய்­வ­துடன், அத்­த­கைய நிலைமை நல்­லி­ணக்கம், நல்­லெண்ணம், அமைதி, நீதி, சமத்­துவம், ஆகி­ய­வற்றில் நேரெ­தி­ரான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­து­விடும்.

14. அதனால் பின்­வரும் நட­வ­டிக்­கை­களை உடன் மேற்­கொள்­ளு­மாறு வேண்­டு­கிறேன்.

I. தென்­ன­ம­ர­வ­டியில் அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருப்­போரில் விரும்­பியோர் தங்கள் நிலத்தில் அமை­தி­யாக செய்­கையை ஆரம்­பித்து, தொடர்­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்டும்.

II. தென்­ன­ம­ர­வ­டிக்கு மீளத்­தி­ரும்­பி­யோரில் காணி இல்­லா­த­வர்­க­ளுக்கு அவர்கள் இங்கு மீளக்­கு­டி­ய­மர்ந்து தமது வாழ்­வா­தா­ரங்­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு வச­தி­யாக நெற்­செய்கை நிலங்­களும் குடி­யி­ருப்புக் காணி­களும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும்.

III. தென்­ன­ம­ர­வடி மக்கள் தங்­களின் நெற்­செய்­கையை குழப்பம் ஏது­மின்றி ஆரம்­பித்து தொடர்­வ­தற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் - பொலிஸார் - போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

15. இந்த விடயம் கிழக்கு மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன.

இந்த விடயத்தில் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்காகவும் உரிய நடவடிக்கைகளுக்காகவும் இதன் பிரதிகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். - என்று சம்பந்தன் எம்.பி. தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர்.ராஜபக்‌ஷ, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் சிறிமேவன் தர்மசேன, குச்சவெளி பிரதேச செயலர், திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.vk

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :