கிளிநொச்சிக்கு வருகைதந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு அபிவிருத்திப்பணிகளை மக்களிடம் கையளித்தார்.
கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ”நெலும்பியச” மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உள்ளக இடப்பெயர்விற்குஉள்ளான மக்களுக்கு நட்டஈட்டினை ஜனாதிபதி வழங்கினார். அடுத்து கிளிநொச்சி மத்திய கல்லூரிமைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதி பத்திரங்களையும்,2352 பேருக்குஅடகுவைத்து தொலைந்த தங்க நகைகளையும் வழங்கினார்.
தொடந்து கிளிநொச்சி இந்துக்கல்லூரி, வட்டக்கச்சி மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றில் அமைக்கப்பட்டமகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை திறந்து வைத்தார். அடுத்து அக்கராயன்குளம் பிரதேசவைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்நோயியல் விடுதியினை திறந்து வைத்தார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத் தொகுதியினையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அரச உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானவா்கள் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment