எம்.ஏ.தாஜகான்-
பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று( 2014.10.27) கல்லூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவிலின் சிரேஸ்ட கல்விமான் சிறந்த பேச்சாளன் எழுத்தாளன் மொழிபெயர்ப்பாளர் மாத்திரமன்றி இலங்கையில் புகழ் பூத்த மௌலவியான ஏ.எல். காசீம் மௌலவி மதனி அவர்களுக்கான கௌரவமும் இடம் பெற்றது.
பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் இம்முறை குறைவான லீவுகளைப் பெற்ற ஆசிரியர்களான எம்.ஏ.தாஜகான் எம்.எம்.மனாப் ஆகியோர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாசிரியர் தின நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.வாசீத் மற்றும் தேசிய காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் ஏ.பதுறுக்கான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் வாழ்த்துகளாலும் பாராட்டுகளினாலும் ஆசிரியர் குழாத்தினர் பெருமிதம் அடைந்தனர்.
0 comments :
Post a Comment