காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில்; சிறுவர் தின நிகழ்வு-படங்கள்

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில்; உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.

இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு சிறுவர் சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது பொருளாதார அபிவிருத்த பிரதியமைசர் ஹிஸ்புல்லாஹ்வினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் பங்குபற்றி சிறுவர் சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை குறித்த இளைஞர் முன்னணியின் பாவனைக்கென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட கணணி இயந்திரங்களும்,ஒளிபெருக்கி சாதனங்களும் இங்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை ஒறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஐ.வை.எப். இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜவ்பர் ,இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக,கல்வி,தஃவா ஆகிய பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :