பெற்றோர்களின் பரீட்சையான ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சை



இக்பால் அலி-

ந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சை என்றால் பெற்றோர்களின் பரீட்சை என்பார்கள். அந்தளவுக்கு பெற்றோர்களிடையே ஒரு வலுமான இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்வதில் மிகையாகாது. இந்தப் பரீட்சையின் விசேட அம்சமே இதுவாகும். எவ்வாறாயினும் ஐந்தாம் தரப் பரீட்சை சிறந்த தர நிர்ணயப் பரீட்சையாகவும் அதி திறன் மிக்க மாணவர்களை இனங்காட்டுகின்ற பரீட்சையாகத் திகழ்கின்றது.

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுள் மாவனல்லை சாஹிரா தேசியப் பாடசாலை மாணவி பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதேவேளை இந்த மாணவி சமா தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்

மருதமுனையை பிறப்பிடமாகவும் மாவனல்லை மண்ணை வசிப்பிடமாகவும் கொண்ட ஐ, எல். எம். நிஸ்வர் மற்றும் ரஜபு நிஷா ஆகிய தம்பதிகளின் புதல்வியான இவர் 197 உயர் தர பெறுபேற்றைப் பெற்று தம் கற்ற பாடசாலைக்கும் தம் சமூகத்திற்கும் ஓர் பெறுமதியான நன்மதிப்பைத் தேடித் தந்துள்ளார் என்பது மட்மன்றி முஸ்லிம்களுடைய கல்வி எழுச்சியை மேலும் விழிப்படையச் செய்துள்ளார் என்று கூறலாம்.

இவரது தந்தை கட்டார் நாட்டில் கனணி கிரபிக் பட வரைஞராக பணிபுரிகின்றார். சமாவின் இல்லம் மாணனல்லை சாஹிராக் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இவருக்கு இப்பாடசாலையில் கல்வி பயிலும் ஒரு சகோதரர் இருக்கின்றார். இம்மாணவி கல்வி பயிலும் சாஹிரா ஆரம்ப் பிரிவின் பொறுப்பாளர் அதிபர் எம். இஸட். எம். ஐயூப் ஆவர்.
பாத்திமா சமா கருத்துத் தெரிவிக்கையில்
இந்தச் சந்தர்ப்பத்தில் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தன்னுடைய கற்கைகுத் துணை புரிந்த பாடசாiலை அதிபர் கே. எம். பௌமி, ஆரம்பப் பிரிவு ஆசிரியர் எம். இஸட். எம் ஐயூப், வகுப்பாசிரியர் எம். பீ. எம் பழீல் ஆகியோருக்கும் மற்றும் என்னுடைய பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். சாஹிராக் கல்லூரியில் தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். என்னுடைய முயற்சிகளுக்கு எனது பெற்றோர்களும் கஷ;டத்துடன் உந்து சக்தியாக இருந்தார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களிலும் இப்பாடசாலையில் கல்வி கற்று அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் நற்பெயரையும் புகழையும் ஈட்டிக் கொடுப்பேன் என எதிர்பார்க்கின்றேன். அத்துடன் என்னுடைய பெறுபேறுகளைக் கேட்டு யார் யாரோ சந்தோசம் அடைகின்றார்களோ அனைத்து மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய கல்வி முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர் கே எம். பௌமி கருத்துத் தெரிவிக்கையில்
197 புள்ளிகளைப் பெற்ற இந்த மாணவியின் சாதனையை உண்மையிலேயே தமிழ் மொழி மூலப் பாடசாலைககளைப் பொறுத்தவரையில் வரலாறு கண்ட நிகழ்வாக நாங்கள் பார்க்கின்றோம். இதற்கு முன்னர் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் 197 புள்ளிகளை எவரும் பெற்று இருக்க முடியாது எனக் கருதுகின்றேன். 

சப்ரகமுவ மாகாணம் மாத்திரமல்ல அகில இலங்கை ரீதீயாகப் பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொண்டவர். அது மாத்திரமல்ல தனது அயராது உழைப்பினால் எந்தவொரு வேலையையும் உடனடியாகச் செய்யக் கூடிய ஒரு மாணவி. இந்த மாணவியுடைய வளர்ச்சியை மூன்றாம் ஆண்டு முதல் காணக் கூடியதாக இருந்தது.
இந்தப் பெறுபேற்றுக் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை நிர்வாகம். தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரைக்கும் ஒத்துழைத்த ஆசிரியர்கள். விசேடமாக புலமைப் பரிசில் பரீட்சைக்கு துணைநின்ற அந்த ஆறு ஆசிரியர்கள் உட்பட வகுப்பாசிரியருக்கும் நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். 

அது மாத்திமல்ல மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட அந்தப் பரீட்சை வினாத் தாள்களுக்கு முகம் கொடுத்து சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டார். மாகாண கல்வித் திணைக்களம், வலயக் கல்வித் திணைக்களம் இந்தப் பெறுபேற்று உதவி புரிந்துள்ளார்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஏனைய பாடசாலையோடு இணைந்து உழைக்கின்ற அமைப்புக்கள், நலன்விரும்பிகள் பெற்றோர்களும் சேர்ந்து இந்தப் பெறுபேற்றுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள். இதில் சம்மந்தபட்ட அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

வகுப்பாசிரியர் எம். பீ. எம் பழீல் கருத்துத் தெரிவிக்கையில்
மானவல்லை சாஹிரா ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கின்ற மாணவி சபா புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடத்தைப் பெற்றதையிட்டு நாங்கள் சந்தோசம் அடைகின்றோம். இமாணவியைப் பற்றிக் கூறுவதாயின் சகல துறைகளிலும் திறமையுடைய மாணவி. படிப்பில் மாத்திரமல்ல விளையாட்டுத்துறை பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி இது போன்ற இன்னும் பல துறைகளில் சகலவற்றிலும் திறமை கொண்ட மாணவி. இவ்வாறான வெற்றியை யீட்டுள்ளமையை இட்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இதற்குக் காரணமாக முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி கூறிக் கொள்வதோடு இதற்காக அனைத்து ஆசிரியர்களும் பாடுபட்டுள்ளார்கள். தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான ஆசிரியர்கள், ஆங்கிலம் சிங்களம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதேபோன்று அதிபர் உதவி அதிபர் இதற்காக முழு நேரத்தையும் செலவு செய்து இந்த உயர் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சபாவின் தாயார் ரஜபு நிஷh கருத்துக் கூறுகையில்
நான் முதலில் அல்லாஹ்வுக்கு சுக்கு செய்து விட்டு இந்தப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் தான் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் பிள்ளைகளுக்கு முறையான கல்வியைக் கொடுத்து முழுக்க முழுக்க பிள்ளையின் வளர்ச்சிக்காக தியாக அர்ப்பணிப்புடன் உந்து சக்தியாக செயற்பட்டு இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் பாடசாலை அதிபர் ஆசிரியர்களே. இவ்வாறு முன்னுக்குக் கொண்டுவருதற்கு ஆசிரியர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. 

 கட்டுரைப் போட்டி. பேச்சுப் போட்டி, கதைப் போட்டி என பல்வேறு செயற்பாடுகளும் இந்த ஆசிரியர்களே வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் என்றென்றும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வகையில் இம்முறை வெளியான பெறுபேறுகளின் படி தமிழ் மொழி மூலப் பெறுபேறுகளின் படி முஸ்லிம் மாணவர்கள் பல மாவட்டங்களில் முன்நிலையில் திகழ்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அம்மாணவர்களை பராட்டி, முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அவர்களை வழிநடத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் குறிப்பாக அனைத்து முஸ்லிம்களதும் பொறுப்பாகும்.

இந்தப் புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியிலும் நுண்ணறிவு வளர்ச்சியிலும் புத்தி கூர்மை மற்றும் பிரச்சினையை விடுவித்தல், தீர்மானம் எடுக்கும் திறன் விருத்தி என்பவற்றுக்கு வித்தி;ட்ட ஒன்று. மறுபுறம் நகரிலுள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு வசதி படைத்தவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலமை மாறி, இப்பரீட்சையில் சித்தியடைவதன் மூலம் பின்தங்கிய வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இப்பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு கதவுகள் திறந்துள்ளன. அது மாத்திரமல்ல எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்கு வழிகோலக் கூடிய ஒன்று.

எனவே இம்முறை வெறியான புலமை பரீட்சையில் பாத்திமா சபா 197 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டமை என்பது மாவனல்லை சாஹிராக் கல்லூரியின் சாதனை என்பதை விட ஒரு சமூகத்தின் கல்வி விடியலுக்கான வரலாற்றுச் சாதனை என்றே கூற வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :