எதிர்க்கட்சிகள் அனை த்தையும் ஒன்றினைத்து, பொது எதிரணி என்ற கோட்பாட்டினை உருவாக்கியவன் நானே. இம்முறை அரசாங்கத்திற்கு எதிரான பொது எதிரணியினை உருவாக்குவதென்றால் அதனை பலப்படுத்துவதில் இணங்க முடியும். எனினும் பொது வேட்பாளர் பிரதான மூன்று எதிர்க்கட்சிகளின் ஒருவராக இருக்க வேண்டும் என தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா பொதுக்கொள்கையில் இணங்
காவிடின் தேர்தலை புறக்கணிக்கவும் அல்லது தனித்துப் போட்டியிடவும் திட்டமுள்ளது எனவும் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினரால் நேற்று கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்தின் சுய நல ஆட்சியினை கட்டுப்படுத்தவும் நாட்டில் ஜனநாயகத்தினை ஏட்படுத்தவும் நல்ல சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது.
எனினும் அதனை ஒரு கோட்பாட்டின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து பெற வேண்டும். அதேபோல் இந்த நாட்டில் தற்போது நிலவும் அரசியல் கலாசாரத்தினை மாற்றியமைக்க வேண்டும். அதற்காகவே சகல எதிர்க்கட்சிகளும் முயற்சிக்கின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாம் ஒன்றிணைந்து இம்முயற்சியினை மேற்கொண்டிருந்தோம். நாட்டில் உள்ள சகல எதிர் கட்சிகளையும் ஒரே மேடையில் ஒரு கொள்கையின் கீழ் இணைத்து பயணித்த பெருமை என்னையே சாரும். அதே கோட்பாட்டினை இப்போதும் கடைப்பிடிக்க அனைவரும் தயாரெனின் அதனை செயற்படுத்திப் பார்க்க முடியும். எனினும் நாம் மூன்று கொள்கைகளை கடைப்பிடிக்க சிந்திக்கின்றோம்.
ஜனநாயக கட்சியினை பலப்படுத்தவும் கட்சியின் உறுப்பினர்களை பலப்படுத்தவும் எனக்கு தேவையுள்ளது. மக்களின் ஆதரவினை பெற்ற கட்சியாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும் எமக்கான கொள்கையினை உறுதிப்படுத்தவும் நாம் ஜனாதிபதித்தேர்தலில் தனித்து போட்டியிடுவதே சிறந்தாகும். அதேபோல் பொது எதிரணியில் எமது தனிப்பட்ட கொள்ளை களுக்கு முன்னுரிமை இல்லாவிடினும் அது எமது கட்சியினையே பாதித்துவிடும்.
எனவே, அவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் தனித்து செயற்படுவது நல்ல முடிவாக அமையும்.
அதேபோல் நாட்டில் சுயாதீனமான தேர்தல் இடம்பெறுவதில்லை. கடந்த ஊவா மாகாணசபைத்தேர்தல் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ என்ற தனி மனிதனின் விரும்பத்திற்காக அரசியல் யாப்பினையே மாற்றப்பார்க்கின்றனர். நாட்டில் அரசியல் யாப்பினை மீறியும். சட்டதிட்டங்களை மீறியும் ஒருவர் செயற்படுவது அவரை தேசத்துரோகியாக இனம் காட்டும் எனவும் இன்று நாட்டின் தேசத்துரோகி என்ற பட்டியிலில் முதலிடத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே உள்ளார். ஆகவே, ஜனநாயகத்தினை மீறி நடாத்தும் இத்தேர்தலில் போட்டியிடாது தேர்தலை புறக்கணிப்பது மேலானது. ஆகவே, அவ்வாறானதொரு முடிவினை எடுப்பதிலும் நாம் தயங்கவில்லை
எனினும் இன்று சகல எதிர்க்கட்சிகளும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுயநல குடும்ப அரசியலுக்காக நாட்டியும் மக்களையும் சுறையடும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க நாம் சில தியாகங்களையும் செய்ய வேண்டும்.
எனவே, அவ்வாறான பொதுவானதொரு எண்ணத்திற்காக நாம் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பொது எதிரணியினை பலப்படுத்துவது குறித்தும் சிந்திக்கின்றோம். அதேபோல் பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக்கட்சியும் எமது உதவிகளை கோரவுள்ளது. எனவே, பொது எதிரணியினை பலப்படுத்த முடியும். ஆனால், பொது வேட்பாளர் பக்கச்சார்பில்லாத சுயநலமாக தனது கட்சியினைப் பலப்படுத்தக்கூடிய வகையில் அமையாது பொது எதிரணியின் கொள்கையினை பலப்படுத்துபவராக இருக்கவேண்டும்.
அதுமட்டுமன்றி பொது வேட்பாளர் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக்க கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் ஒருவராகவே இருக்க வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாம் பொது எதிரணியினை ஆதரித்து செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
<வீரகேசரி>
0 comments :
Post a Comment