ஜனாதிபதித் தேர்தல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அது தொடர்பாக எவ்விதமான முடிவுகளும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிய காலத்தில் மக்கள் கருத்துக்களைப் பெற்று உத்தியோகபூர்வமான நடவடிக்கைகள் விரைவிலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் நம்பகரமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் அதற்கான ஆலோசனையை நீதிமன்றிடம் பெறமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியே ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதோடு ஏனைய கட்சிகளை பொது அணியில் ஒன்றிணைக்கும் முனைப்புக்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் ஆட்சேபனை இல்லையென தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஜனநாயக்கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா ஆகியோரும் பிரத்தியேக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். மேலும் மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே தவிர பொதுவேட்பாளர் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆளும், எதிர்த்தரப்புக்களின் இவ்வாறான நிலைப்பாடுகளுக்கும் நகர்வுகளுக்கும் மத்தியிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பதாவது,
ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோக அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில் நாம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்கவில்லை. எனினும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாம் பொதுமக்களின் கருத்துக்களை பெறவுள்ளோம். அத்தோடு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இதற்காக கூட்டமைப்பு விசேட கலந்துரையாடலையும் மேற்கொள்ளும்.
எவ்வாறாயினும் எமது இறுதி முடிவு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என்ப துடன் தமிழ் மக்களின் நலன்களையும் எதிர்
காலத்தையும் பாதிக்காதவாறு அது அமைந் திருக்கும். குறிப்பாக தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் காணப்படும் தற்போதைய நிலைமைகள், இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் அதிகூடிய கவனத் தையும் கருத்திற்கொண்டதாக எமது இறுதி முடிவு அமையும் என்றார்.
0 comments :
Post a Comment