இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக அரசாங்கம் புதிய முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த முறையின் கீழ் வசதியற்றோரும் ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ள முடியும் என திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தினை கந்தளாய் அல் – தாரிக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“பண வசதியுள்ளவர்கள் மாத்திரமே ஹஜ் கடமையினை மேற்கொள்வதாக எனக்கு அறியக் கிடைத்தது. அத்துடன் வசதி படைத்தவர்கள் 100 தடவைகள் ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்வதுடன் தனது முதுமை காலப்பகுதியிலும் ஹஜ் கடமையினை மேற்கொள்கின்றனர்.
இதனால் ஹஜ் யாத்திரிகை தொடர்பில் புதிய முறையொன்றினை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசாங்க நிதியின் ஊடாக வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ளவும் சந்தர்பபம் வழங்கப்படவுள்ளது” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
vi-
0 comments :
Post a Comment