எம்.ஏ.தாஜகான்-
பொத்துவில் அறுகம்பை கொமினிட்டி ஒன்றியத்தினால் பொத்துவில் பாக்கியவத்தை பகுதியின் அபிவிருத்தி அங்குரார்பண நிகழ்வு இன்று 2014.10.26 பொத்துவில் அஸ்ஸாதிக் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
அபிவிருத்தி அங்குரார்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேசசபை உறுப்பினரும் பொத்துவில் அறுகம்பை கொமினிட்டி ஒன்றியத்தின் தலைவருமான எம்.எச்.அப்துல் றகீம் கலந்து சிறப்பித்தார்.
பாக்கியவத்தைப் பகுதிக்கான இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் பெண்களுக்கான குடிசைக் கைத் தொழில் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கல் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் அபிவிருத்தியில் இக்ராஹ் கல்வி நிறுவனத்துக்கான நிதி ஒதுக்கீடு விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்குதல் எனும் செயற்பாடுகளுக்கான கலந்துரையாடலுடன் அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் அறுகம்பை கொமினிட்டி ஒன்றியத்தின் செயலாளரும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தருமான என்.எம்.ஜகுபர் பொத்துவில் அறுகம்பை கொமினிட்டி ஒன்றியத்தின் பொருளாளரும் பிரதி அதிபருமான ஏ.எல்.றிஸ்வான் அவர்களும் இக்ராஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆசிரியர் என்.டி.ராசுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
0 comments :
Post a Comment