முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் ஊதுபத்தி உருட்டுகிறார்

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு, 13வது நாளான நேற்று, முன்னாள் அமைச்சர்களின் வருகையே, அதிகமாக இருந்தது. தற்போதைய அமைச்சர்கள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்., 27ம் தேதி மாலை, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன், 13 நாட்கள் முடிந்து விட்டன. உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்வதற்காக, வழக்கறிஞர்கள் டில்லி சென்றனர்.கர்நாடகாவில், தொடர் விடுமுறை முடிந்ததால், நேற்று பெங்களூரு மத்திய சிறைக்கு, மற்ற கைதிகளை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

கைதிகளின் உறவினர்களிடம், போலீசார், கடுமையான சோதனை நடத்திய பின்னரே, உள்ளே அனுமதித்தனர்.அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், தன் ஆதரவாளர்களுடன் வந்தபோது, அங்கிருந்த போலீசார், அவரை மட்டும் சிறை வளாகத்தினுள் செல்லுமாறு அனுமதித்தனர். இதனால் கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள், போலீசாரிடம் சண்டை போட்டனர். இதனால் போலீசாருக்கும், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே, 'தள்ளு முள்ளு' ஏற்பட்டது.முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பச்சைமால், முனுசாமி, எம்.பி., அசோக் குமார், முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார் ஆகியோர், தினமும் சிறை வளாகத்தில் ஆஜராகி வருகின்றனர். இது போன்று நேற்றும் வந்திருந்தனர். 

இதுதவிர, ஒருசில எம்.எல்.ஏ.,க்களும் ஆஜராயினர். இவர்களுடன், சில ஆதரவாளர்கள் வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. போலீசாரின் கண்ணில் தப்பி, அவர்கள் எப்படியோ உள்ளே சென்று விட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனை பார்ப்பதற்காக, அவரது மனைவி சத்யலட்சுமி, மாமனார், மாமியார், உறவினர்கள் என, எட்டு பேர், இரண்டு கார்களில் வந்திருந்தனர். ஒரே ஒரு கார் மட்டும், உள்ளே சென்றால் போதும் என்று போலீசார் கூறவே, அந்த கார், இரண்டு முறை உள்ளே சென்று வந்தது. சுதாகரனை, அவர்கள் சந்தித்து பேசியதாக தெரிகிறது.

சுதாகரன், தினமும் சிறையிலுள்ள உணவையே சாப்பிட்டு வருகிறார். நேற்று வந்திருந்த உறவினர்கள், அவருக்கு பழங்கள், பிஸ்கெட், பிரட் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. தனக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருந்த அவரை, சிறையிலுள்ள, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உதவியாளர் அலிகான் சமாதானப்படுத்தினார்.
ஜெயலலிதா இருக்கும் அறை பகுதியை, சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, தினமும் கண்காணித்து வருகிறார். அவரது தேவையை பற்றி விசாரித்து அறிகிறார்.பொதுவாக, தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு, ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் அப்பணியை செய்கின்றனரா என்பது தெரியவில்லை.

பெங்களூரில், தொடர்ச்சியாக இரவு நேரத்தில் மழை பெய்வதால், குளிர் அதிகமாக உள்ளது. இதனால், ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு, கூடுதலாக போர்வைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களை பாதுகாப்பதுஎமது பொறுப்பு: மகாராஷ்டிர தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல, பெல்காம் மாவட்ட சாம்ரா விமான நிலையத்துக்கு, காங்., தலைவர் சோனியாவை வரவேற்க, 
முதல்வர் சித்தராமையா காத்திருந்த வேளையில், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலுள்ள கன்னடர்களுக்கு, எந்த அபாயமும் ஏற்பட்டுவிடாது. கர்நாடகத்திலும், தமிழர்கள் உள்ளனர். அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன், கர்நாடக போலீஸ் அதிகாரிகள் பேசி உள்ளனர். கன்னடர்களின் பாதுகாப்பு, அவர்களின் பொறுப்பு. அதே போன்று, இங்குள்ள தமிழர்களை பாதுகாப்பது, எமது பொறுப்பு. இதில், எந்த பயமும் வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
<தினமலர்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :