எம்.எம்.ஏ.ஸமட்-
கொஸ்லந்த மீறியபெத்தையில் நிகழ்ந்த கோர மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீண்டப்படுவதோடு முழு மலையக மக்களின் லயன் அறை வாழ்க்கைக்கும் இந்த பேரனர்த்தம் முற்றுப்புள்ளியாக அமைய வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனைக் கல்வி வலய மேற்பார்வை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தோட்டப்புற மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்களிப்புச் செய்கின்றவர்கள். இலங்கையின் ஏற்றுமதி பொருட்களான தேயிலை, இறப்பர் என்பவற்றின் உற்பத்தியில் ஏழைத் தோட்ட மக்களின் வியர்வை சிந்தப்படுகிறது. அவர்களின் போதிய வருமானமற்ற உழைப்பு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியமானதாகவுள்ளது.
இருந்தும,; அவர்களின் வாழ்வில் இன்னும் ஒளியேற்றப்படவில்லை. அன்று தொட்டு இன்று வரை லயன் அறை வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தோட்டப்புற மக்களின் வாழ்க்கை வளமுள்ளதாக மாற்றப்பட வேண்டுமாயின் லயன் அறை வாழ்க்கை ஒழிக்கப்பட்டு நிரந்தர வீடுகள் அவர்களுக்கு நிர்மாணித்துக்;கொடுக்கப்பட வேண்டும். இதனை அரசாங்கம் மேற்கொள்வது இன்றியமையாததாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் இயற்கையாது ஆனால் அதனால் பாரிய விளைவுகள் ஏற்பாடது மக்களைப் பாதுகாக்கப்பது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். அதனை பொறுப்புதாரிகள் முறையாக மேற்கொள்ளவேண்டும் எனக் கூற விரும்புகின்றேன்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மண்சரிவனால் முழு மீரியபெத்த தோட்ட மக்களுமே காவுகொள்ளப்பட்டுவிட்டார்கள் எனக் கூறப்படுகிறிது ஏறக்குறை 300 பேர் அளவில் உயிர் இழந்து அல்லது காணமல் போயியுள்ளனர்.
சுனாமியின் பின்னர் இலங்கையில் நிகந்த மிகப்பெரிய அனர்த்தம் இந்த மீறியப்பெத்த மண்சரிவாகும்.
உயிர் இழந்தவர்களை விடுத்து தப்பிப் பிழைத்துள்ளவர் பாதிப்பட்டு சிகிச்சை பெறுவோர் தொடர்பில் எவ்வித இன, மத, அரசியல் பாகுபாடுமின்றி, வேறுபாடுகளின்றி சகல இலங்கை வாழ் மக்களும் உதவிக் கரம் நீண்ட முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
மலையக மக்களின் வரலாற்றில் மறக்கப்படதா அனர்த்தமாகவுள்ள இந்த மண்சரிவினால் பாதிகப்பட்ட மக்களுக்களின் துயரங்களில் பங்குகொள்ளவதாகத் தெரிவித்துள்ள மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மலையத் தோட்டப்புற மக்களின் விடிவுக்கான பாதை இந்த கோர மண்சரிவினூடாகத் திறக்கப்படுவதோடு, லயன் அறை வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளியாக அமைய வேண்டுமென அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment