நிஷ்மி-
ஐக்கிய நாடுகள் ஹபிடாட் நிறுவனத்தினால் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேசசபைப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட அனர்த்தத்திற்கு ஈடு கொடுத்தல் மற்றும் அனர்த்த முன்னாயித்த விழிப்புணர்வு சம்பந்தமானபோட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த செவ்வாய்க்கிழமை (28) அக்கரைப்பற்று ரிஎப்சி ஹோட்டலில் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் ஹபிடாட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மஞ்சு விதான கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அஹமட் ஸக்கி அவர்கள் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸீக், மா நகர ஆணையாளர்ஏ.எல்.அஷ்மி, ஹபிடாட் நிறுவன திட்ட முகாமையாளர் இந்து வீரசூரிய, அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஸியாத், பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலாஹுதீன், சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஸெய்னுதீன், முனவ்வறா கனிஷ்ட கல்லூரி அதிபர் ஏ.ஜி.அன்வர், ஆண்கள் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நயீம் மற்றும் வெற்றி பெற்ற பாடசாலைகளின அனர்த்த முகாமைத்துவ குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி உள்ளிட்ட அனைத்து அதிதிகளும் மலர்மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமிய பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொல்லடி வரவேற்புடன் ரிஎப்சி ஹோட்டலின் திறந்த வெளியரங்கிற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
திட்ட இணைப்பாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஹபிடாட் நிறுவன திட்ட முகாமையாளர் இந்து வீரசூரிய, அக்கரைப்பற்று பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.றாஸீக் மற்றும் மாநகர மேயர் ஏ.அஹமட் ஸக்கி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகள், அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் செயற்பாட்டை பாராட்டி வாழ்த்தினார்கள்.
பின்னர் மாநகர மேயர் ஏ.அஹமட் ஸக்கி, பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், திட்ட முகாமயாளர் திருமதி ; இந்து வீரசூரிய ஆகியோர் முறையே முதலாம் இடம் பெற்ற அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஜெய்னுதீன், 02 ஆம் இடம்பெற்ற முனவ்வறா கனிஷ்ட கல்லூரி அதிபர் ஏ.ஜி.அன்வர் 03 ஆம் இடம் பெற்ற ஆண்கள் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.ஏ.நயீம் ஆகியோர்களுக்கு விருது,சான்றிதழ் மற்றும் காசோலைக்கான ஆவணம் என்பவற்றை வழங்கி வைத்தார்கள்
மாணவர்களுக்கான சான்றிதழ்களை மா நகர ஆணையாளர் ஏ.எல்.அஷ்மி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஸியாத், பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலாஹுதீன், ஐ.நா ஹபிடாட் திட்ட முகாமையாளர் மஞ்சு விதானகமகே ஆகியோர் வழங்கி வைத்தனர். கலை , கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
0 comments :
Post a Comment