நமது எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் எவ்வாறு அமைதல் வேண்டும்

முனாப் நுபார்தீன்-

லங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கால கட்டத்தை அது கடந்து கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் கடந்த 2014-09-20 ம் திகதி நடந்து முடிந்த ஊவா மாகானசபைக்கானத் தேர்தல் பலத்தரப்பினர்களாலும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் நடந்து முடிந்தது. என்றாலும் அனைத்துத் தரப்பினர்களதும் எதிர்பார்ப்புக்கள் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைந்தனவா என்பது கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதனையும் அவற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மிகவும் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பேரினவாத பாசிச கும்பல்களால் அரச ஆசிர்வாதத்துடன் கூடிய அங்கீகாரத்துடனும் அதிகாரிகளின் ஆதரவுடனும் பல்வேறு துண்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்து உயிர் பறிக்கப்பட்டு உடமை அளிக்கப்பட்டு மதவழிபாடு முடக்கப்பட்டு வழிபாட்டுத் தளங்கள் உடைக்கப்பட்டும் மூடப்பட்டும் மதரீதியாகவும் இனரீதியாகவும் உளரீதியாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிறுபாண்மைச் சமூகமான முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைதல் வேண்டும் அது எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய உரிய தருணம் இதுவாகும்.

இந்த அரிய சந்தர்ப்பத்தினையும் நமது அரசியல் தலைமைகளும் ஆண்மீகத் தலைமைகளும் சமூக இயக்கங்களும் ஒன்றுபட்டு எதிர் கொள்ளத் தவறின் அது நமது அறியாமையின் அதி உச்ச கட்டமாகும் என்றே கூற வேண்டும்.

எனவே எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களாகிய நாம் அற்ப்ப சலுகைகளுக்காகவும் சுயநலன்களுக்காகவும் வாக்களிக்காது நம் சமூகத்திற்காகவும் சுய கௌரவத்திற்க்காகவும் வாக்களித்தல் அவசியமாகும் ராஜபக்ஸ அரசு நமக்கு இழைத்த இன்னும் இழைத்துக் கொண்டிருக்கும் அற்ப்பத்தனமான ஈனச் செயல்கள் இலகுவில் மறக்கும்படியானவைகளன்று.

ஆகவே இதன் பிறகும் ராஜபக்ஸ அரசு எமக்குத் தொழில் வழங்கியது அல்லது ஒப்பந்தம் (உழவெசயஉவ) கொடுத்தது போன்ற மற்றும் வேறு விதமான சலுகைகள் வழங்கினார்கள் என்பதற்காக மட்டும் சென்ஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக வேண்டி அவருக்கே எமது வாக்குகளை வழங்க வேண்டும் என்று யாராவது நினைத்தால் அது நம் சமயத்திற்கும் சமூகத்திற்கும் நாம் செய்யும் மிகப்பெரும் துரோகமாகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நம் சமூகத்தில் வெறும் பத்து வீதத்திற்கும் குறைவானவர்களுக்கு இவ்வாறான சலுகைகளை வழங்கியமைக்காக ஏனைய 90 வீதத்திற்கும் அதிகமான மக்களைப் பலிக்கடாவாக்குவது எந்த வகையில் நியாயம். மீண்டும் மீண்டும் நாம் ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்கும் வாக்குகள் நம் சமயத்திற்கும் சமூகத்திற்கும் எதிராகவே பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த அரசியல் களநிலவரங்களை நன்றாகத் தெரிந்திருந்தும் தொடர்ந்தும் அவரின் அநியாயங்களுக்குத் துணை நிற்பதென்பது ஒரு உண்மையான இறைவிசுவாசியின் பண்பாக இருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒருவன் ஒரு முஸ்லிமுடைய இரத்தம் சிந்தப்படுவதற்கு சொல்லின் ஒரு பகுதியினாலேனும் உதவி செய்தானோ அவனது இரு கண்களுக்கு மத்தியில்; நாளை மறுமையில் அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையா (தூரமான)னவன் என்று எழுதப்பட்டிருக்கும்.(நூல் : ததுகிரத்துல் ஹிஃப்ஃபாழ்)

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒருவன் ஒரு முஸ்ம் கொல்லப்படுவதற்கு சொல்லின் ஒரு பகுதியினாலேனும் உதவி செய்தானோ அவனது இரு கண்களுக்கு மத்தியில்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையா (தூரமான)னவன் என்று எழுதப்பட்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வை சந்திப்பான்.(நூல் : இபுனு மாஜா)
எனவே தங்களது சுயநலனுக்காக வாக்கழிக்க இருப்பவர்கள் நாளை மறுமையைப் பயந்து கொள்ளுங்கள் ராஜபக்ஸ அரசு முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் செய்யும் அத்தனைவிதமான தீமைகளுக்கும் நீங்களும் பங்காளிகள் ஆவீர்கள் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

தனி மனிதனாக இருந்து மிகப்பெரும் கொடுங்கோலனாகிய ஒரு அரசனையே எதிர்த்துப் போராடி ஒரு சமூகம் எனும் பெயர் பெற்ற வீர புருஷர் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் நாம் எனவே அந்த உத்தமரின் வாழ்க்கை வரலாற்றினை நாம் முன்மாதிரியாகக் கொண்டு இந்த அநியாயக்கார அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்த்துப் போராடுதல்; வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள் நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காகஇத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள்ää என் பாதையில் போரிடுவதற்காகவும் என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்;கள்ää அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்ஆனால் நீங்கள் மறைத்துவைப்பதையும்ää நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும்ää உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.

அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால்அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும்தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள் தவிர நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.

உங்கள் உறவினரும்äஉங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்ää அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
இப்றாஹீமிடமும்அவரோடு இருந்தவர்களிடமும்நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதுதம் சமூகத்தாரிடம் அவர்கள்''உங்களை விட்டும் இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும்நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம் அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும் வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன"" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி ''அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்"" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறதுஅன்றியும் அவர் கூறினார்); ''எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும்உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது

''எங்கள் இறைவா! காஃபிர்களுக்குää எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்"" (என்றும் வேண்டினார்).

உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும்ää நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறதுää ஆனால்ää எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோää (அது அவருக்கு இழப்புதான்ää ஏனெனில்ää எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன்ää புகழ் மிக்கவன்.

உங்களுக்கும்ää அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்ää மேலும்ää அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும்ää உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும்ää அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றிää நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களேää அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவேää எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.(அல்-குர்ஆன் : 60: 1-9) 

எனவே எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களாகிய நாம் ராஜபக்ஸ அவர்கள் எமக்கு எப்படிப்பட்ட வாக்குறுதிகளைத் தந்த போதிலும் அவரை நாம் ஆதரிக்கக் கூடாது. மாறாக வேறு யாரை வேண்டுமானாலும் எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆதரிப்பதன் மூலம் நமது சமூகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் ராஜபக்ஸ அவர்களுக்குக் காட்டுதல் காலத்தின் கட்டாயமாகும் என்றே கருதுகின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :