ஹப்புத்தளை - ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட நான்கு பாடசாலைகள் எதிர்வரும் 3ஆம் திகதிவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவின் பணிப்புக்கு அமைய ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி.அம்பன்வல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதன்படி ஹல்துமுல்ல கல்வி வலயத்தில் உள்ள அம்பிட்டிகந்த கனிஸ்ட வித்தியாலயம், கொஸ்லாந்தை தமிழ் மகா வித்தியாலயம், பூணாகல தமிழ் மகா வித்தியாலம் மற்றும் கிரேக் வித்தியாலயம் போன்றவை இவ்வாறு 3ம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
ஹல்துமுல்ல மீறியபெந்த தோட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் குறித்த தோட்டம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
உயிரிழந்த10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 300 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார், இராணுவத்தினர், அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment