காணி உறுதிப் பத்திரங்கள், தங்கநகைகள் ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.



பழுலுல்லாஹ் பர்ஹான்-

டமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளித்தார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்றைய தினம் (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவற்றை கையளித்தார்.

இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 20 ஆயிரம் பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 2352 பேர் தொலைந்து போன நகைகளையும் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதீயூதீன், சமூக சேவைகள் அமைச்சர் பிலீக்ஸ் பெரேரா உரையாற்றியதைதயடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றினார்.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 20 ஆயிரத்தி;ற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :