பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நுழைவாயில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் வி.ரீ.எம்.ஹனீபா தலைமையில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்றது.
திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீடான 18 இலட்சம் ரூபாயில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், ஏ.எஸ்.எம். உவைஸ், எஸ்.எல்.முனாஸ், பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment