"நல்லிணக்கமாக வாழ்வோம், பலமாய் எழுவோம்" NFGGயின் ஏற்பாட்டில் மன்னாரில் விஷேட நிகழ்வு

ட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் இடம்பெற்று 24 வருடங்கள் நிறைவுற்று இருக்கின்ற நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் நினைவு தின நிகழ்வு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஏற்பாடு செய்துள்ளது.

"நல்லிணக்கமாக வாழ்வோம், பலமாய் எழுவோம்" என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வு நாளை 30 ம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு மன்னார் YMCA மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் "வடக்கு முஸ்லிம்கள் கடந்து வந்த பாதையும்; முன்னோக்கியுள்ள பாதையும்" என்ற தலைப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்கள் விஷேட சொற்பொழிவு ஒன்றினையும் நிகழ்த்தவுள்ளார்.

இந்த நினைவு நாள் நிகழ்வில் விஷேட அதிதிகளாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் HS.ஹஸ்புல்லாஹ், இந்து குருமார் சம்மேளனத்தின் தலைவர் பிரம்ம ஸ்ரீ மனோ ஐங்கர சர்மா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தள கிளை தலைவரும், இலங்கை சர்வமத காங்கிரஸின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க், அல்ஆலிம் மஹ்மூத் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹுனைஸ் பாறூக், கௌரவ முத்தலிப் பாவா பாறூக், வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி, கிராம அபிவிருத்தி அமைச்சர், சட்டத்தரணி கௌரவ பா.டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ அஸ்மின் அய்யூப், கௌரவ பிரிமுஸ் சிராய்வா, கௌரவ Dr.S.குணசீலன், கௌரவ றிப்கான் பதியுதீன், கௌரவ ஹபீப் முஹம்மத் ரயீஸ் ஆகியோருடன் அதிதிகளாக கல்விமான்கள், சமூக இயக்கங்களின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :