தொடு திரை( touch screen) கொண்டுள்ள கைத்தொலைபேசி, கணணி மற்றும் பல சாதனங்கள் இன்று உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பாவிக்கப்படுவனவாக உள்ளன.
இந்த வகையில் உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத டச் ஸ்கரீன் விமானம் ஒன்றை நவீன தொழிநுட்ப உலகம் நமக்கு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மேற்படி ஜன்னல்கள் இல்லாத தொடுத்திரை ( touch screen) விமானத்தை பிரித்தானியாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ளார். இது விஞ்ஞான உலகம் நமக்குக் கொடுக்கும் புதிய வரப்பிரசாதம். இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் முழுமையாக வெளியில் உள்ள காட்சிகளை மிகத்துல்லியமாகப் பார்க்க உதவுகிறது.
வழமையான ஜன்னல்களுக்கு பதிலாக வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் பொருத்தப்பட்டிருக்கும் முழு நீள தொடு திரைகளை பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப தொடுவதன் மூலம் தத்ரூபமாக வானத்தை பார்க்கலாம்.
இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விமானங்களை தயாரிப்பதன் மூலம் விமானத்தின் எடையை மட்டுமின்றி எரிபொருளையும் சிக்கனப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதற்கான மாதிரி வடிவம் கொண்ட காணொளி தற்போது வெளியாகி வலைத்தளங்களில் உலா வருகிறது.
மேலும் இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இப்பொழுது ஆய்வுகள் மேற்கொண்டாலும் கூட இது மக்களின் பாவனைக்கு வர சுமார் 10 வருடங்கள் வரை தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர். சற்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
0 comments :
Post a Comment