கிழக்கு முதலமைச்சர் பதவியை அம்பாறை மாவட்டதிற்கே வழங்க வேண்டும்-றம்ழான்!

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவிருக்கும் முதலமைச்சர் பதவியை அம்பாறை மாவட்டதிற்கே வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK.றம்ழான் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளடக்கப்படுகின்றது இதில் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட முதலாவது கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது முதலமைச்சர் என்ற பதவியை வகித்தது அம்முதலமைச்சர் ஒரு தமிழினத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டம் முதமைச்சர் என்ற மகுடத்தினை முதலிலே சூடிக் கொண்டது. 

அதற்கு பிற்பாடு நடைபெற்ற இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சுலற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக முதலாவது முதலமைசர் பகுதியை திருகோணாமலை மாவட்டத்திற்கு வழங்கியதன் மூலமாக கிழக்கு மாகாணத்தில் இன்னுமோர் மாவட்டமும் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டு விட்டது அடுத்த படியாக தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குறிய சுலற்சி முறையிலான இரண்டாம் பகுதியான முதலமைச்சர் பதவி கிழக்கு மாகாணத்தில் எஞ்சியிருக்கும் மூன்றாவது மாவட்டமான அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்பட வேண்டும் என்பதே நியாயமானது 

அதற்கு அப்பால் இன்றைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்திலே தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான அதிகமான வாக்குகள் காணப்படுகின்றது அதற்கு அடுத்தபடியாக அதிகமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் பாராளமன்ற உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டமே கொண்டுள்ளது அது மாத்திமின்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான அதிகபட்சசவாலும் அம்பாறை மாவட்டத்திலே காணப்படுகின்றது அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை சிதைத்து பலவீனப்படுத்த மேற்கொண்ட அனைத்து சதிகளையும் இந்த முதலமைச்சர் காலப்பகுதியில் இல்லாமல் செய்ய வேண்டிய சந்தர்ப்பமும் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. 

தற்போதைய ஆட்சி மாற்றம் என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பாகும் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்கும் முதலமைச்சர் பதவியை சாதாகமாக பயன்படுத்தி கட்சியை கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்பை செய்ய முடியும் என்பதுடன் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை சிதைத்து கட்சியையும் முஸ்லிம்களையும் பலவீப்படுத்துவதற்கு அதிகார வர்க்கத்தினரோடு கைகோர்த்துக் கொண்டு செயற்பட்ட சுயநல அரசியல் வாதிகளை இம்முதலமைச்சர் பதவியைக் கொண்டு ஓரம் கட்டுவதற்கும் கட்சியில் இருந்து விலகியிருக்கும் கட்சியின் மூத்த போராளிகளை மீண்டும் கட்சியோடு இணைத்துக் கொள்வதற்கு குறித்த முதலமைச்சர் பதவி மிக முக்கியமானதாக அமையும் 

குறித்த முதலமைச்சர் பதவி அம்பாறை மாவட்டத்திற்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் ஒரு சிலர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை கபடத்தனமாக பயண்படுத்தி முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு கட்சித் தலைமைக்கு சில அமைப்புக்களின் பெயரில் வேண்டுகோல் கடிதங்களை அனுப்பி முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிப்பதற்கு சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

இவர்கள் கட்சியில் பொறுப்பு வாய்ந்த உயர்பதவிகள் வகிக்கின்றார்கள் என்பதற்காக கட்சித்தலைமை ஏமாந்து விடக் கூடாது அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டு இதுவிடயத்தில் முடிவெடுக்க வேண்டும்.

இவர்கள் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் மட்டுமில்லாது கடந்த காலத்தில் தனக்கு கிடைத்த மாகாண அமைச்சுப் பதவியை முறையாக பயண்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் மூன்று முஸ்லிம் பிரதேசங்களையும் இணைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸை வளர்தெடுக்க முடியாது முஸ்லிம் காங்கிரஸிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த வாக்குகளையும் இன்று இழந்து கலுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக மாறுவதற்கு காரணமானவர்கள் எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வளர்தெடுக்கப்போகின்றார்கள்.

எனவே கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி மூலம் எதிர் வரும் கிழக்கு மாகாண சபையில் அதிகபட்சமான ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்வதற்கும் அம்பாறை மாவட்டத்திற்கு இன்று வரையும் வழங்கப்படாத கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை உங்களது காலப்பகுதியில் வழங்கி மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் MHM.அஸ்ரப் அவர்களின் கனவினை நனவாக்க நடைவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -