மெத்தியூஸ்க்கு – ரூ.7½ கோடி: சங்ககர, ஜயவர்த்தனவுக்கு விலை இல்லை!

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8–ந் திகதி முதல் மே 24–ந் திகதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. 

இதையொட்டி 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 44 பேர் அடங்குவார்கள். கழற்றி விடப்பட்ட வீரர்களையும், புதிய வீரர்களும் ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்றனர். 

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று நடந்தது. 2011 உலக கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருதை பெற்ற அதிரடி வீரர் யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவலஸ் அணி அவரை எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.2 கோடியாகும். 8 மடங்கு அதிகமாக அவர் விலை போனார். 

கடந்த ஐ.பி.எல். போட்டியில் யுவராஜ்சிங்கை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு எடுத்தது. சரியாக சோபிக்காததால் அவரை கழற்றி விட்டது. அவர் அதை விட மேலும் ரூ.2 கோடிக்கு ஏலம் போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பெங்களுர் அணி ரூ.10½ கோடிக்கு எடுத்தது. கடந்த முறை அவர் டெல்லி அணியில் விளையாடினார். மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய்யை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. அவரது விலை ரூ.3 கோடியாகும். 

ஏலத்தில் போன மற்ற வீரர்கள் விவரம் வருமாறு:– 

மெத்தியூஸ் (இலங்கை)– ரூ.7½ கோடி (டெல்லி டேர் டெவிலஸ்) 

பீட்டர்சன் (இங்கிலாந்து)– ரூ.2 கோடி (சன் ரைசர்ஸ் ஐதராபாத்) 

அமித்மிஸ்ரா (இந்தியா)– ரூ.3.2 கோடி (டெல்லி) 

மார்கன் (இங்கிலாந்து)– ரூ.1.5 கோடி (மும்பை இந்தியன்ஸ்) 

சங்ககர, ஜயவர்த்தன (இலங்கை), ஹசிம் அமலா (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் விலை போகவில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -