பிறைந்துறைச்சேனையில் சுகாதார உத்தியோகத்தர்கள் சகிதம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை




ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்- 

டந்த பருவப்பேர்ச்சி அடை மழைக்குப் பிறகு வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை 206 சீ கிராமசேவகர் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளின் பெறுக்கமும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதனால் பிரதேசத்தில் வாழும் மக்களை விழிப்பூட்டும் முகமாக டெங்கு நுளம்புகள் பெறுக்கம் அடைவதற்கு காரணமாக இருக்கின்ற குப்பை கூழங்களை உடனுக்குடன் அகற்றுவது சம்பந்தமாகவும், நுளம்புகள் பெறுக்கத்துக்கு எதிரான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முறைகள் சம்பந்தமாகவும் வாழைச்சேனை சுகாதாரப் பிரிவு அதிகாரிகாளாலும் பொலிஸ் உத்தியோகத்தர்களாலும் பிரதேச மக்களுக்கான அறிவுறுத்தல்கள் இன்று திங்கட் கிழமை (16.02.2015) குறிப்பிட்ட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது..

மேலும் இது சம்பந்தமாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்…, ஓட்டமாவடி வாழைச்சேனை புகையிரத பாதையை அண்டிய இரு ஓரங்களிலும் உள்ள பிரதான வடிகான்கள் மிதி பலகை இடப்படால் பல இடங்களில் காணப்படுவதனால் டெங்கு நுளம்புகளின் அதிகரிப்பு காணபடுவதாகவும், பிரதேசத்துக்கு பொறுப்பான கோறளைப்பற்று பிரதேச சபையினால் உரிய நேரத்தில் குப்பைகள் அகற்றப்படால் இருப்பதனாலேயே டெங்கு நுளம்புகளின் பெறுக்கம் பிரதேசத்தில் அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

மேற்படி விழிப்புணர்வு நிகழ்வுக்கு பிரதேசத்துக்கு பொறுப்பன சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், கிராம சேவையாளர் பி.எம்.றம்ளான், றோயல் விளையாட்டுக் கழகத்தினர், அஸ்கர் விளையாட்டுக் கழகத்தினர், மெகா விளையாட்டுக் கழகத்தினர், வாழைச்சேனை பொலிஸ் உதியோகத்தர்கள், கிராமைய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -