வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தனாயக்கவை பார்வையிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னளாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்களை செலவிட்ட முன்னாள் ஜனாதிபதி அவரை நலம் விசாரித்தார்.
முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தனாயக்க போலி ஆவண தயாரிப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.