அக்கரைப்பற்று அல்-பதுர் ரஹ்மானிய்யா முதியோர் சங்கத்தின் 08 வது ஆண்டுப் பூர்த்தி விழா




பைஷல் இஸ்மாயில் -

க்கரைப்பற்று அல்-பதுர் ரஹ்மானிய்யா முதியோர் சங்கத்தின் 08 வது ஆண்டுப் பூர்த்தி விழா நேற்று (12) வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நகர்ப்பிரிவில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று அல்-பதுர் ரஹ்மானிய்யா முதியோர் சங்கத்தின் தலைவர் அப்துஸ்ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.கைஸ், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.சியாட் அஹமட், உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் தேசியத்தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில,; அமைப்பிலுள்ள முதியோர்களுக்கு தங்களின் ஊக்கத்தை மேலோங்கச் செய்யும் நோக்கில் உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -