ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2015ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை வளாகத்தில் அதன் அதிபர் மௌலவி சரஸ்தீன் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 76 வது ஆண்டினை பூர்த்தி செய்யும் முகமாக இவ் விளையாட்டுப்போட்டி அமைந்திருந்திருந்தது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,காணி அமைச்சருமான எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களையும்,பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.
அமைச்சரை கௌரவித்து பாடசாலை சமூகத்தினால் நினைவுப் பரசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கந்தளாய் தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஜூனைட் மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.கே.சுபார்கான்,ஐக்கிய தேசியக் கட்சி சேருவிலத் தொகுதி அமைப்பாளர் அருன சிறிசேன உட்பட பாடசாலை அதிபர்கள் ஊர் பிரமுகர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.