வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முருக்கன் தீவு ஆற்றில் மூழ்கி 28 வயது இளைஞன் மரணம்





த.நவோஜ்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முருக்கன் தீவு ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை ஊனமுற்ற இளைஞன் ஒருவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முருக்கன் தீவு கிராமத்தினைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் வயது (28) என்ற இளைஞனே ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை மாலை இயற்கை கடன்களை முடித்து விட்டு வீட்டின் அருகாமையில் இருக்கும் முருக்கன் தீவு ஆற்றில் இறங்கி உடலை சுத்தம் செய்ய முயன்ற போது கால் தவறி ஆற்றில் விழுந்ததினால் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞன் நேரமாகியும் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் அச்சம் கொண்டு தேடிய போது மேற்படி ஆற்றின் அருகில் உயிரிழந்தவரின் கால் சட்டை காணப்படுவதை கண்டு சந்தேகம் கொண்டு ஆற்றில் இறங்கி தேடிய போது சடலம் தென்படுவதை கண்டு அதனை வெள்ளிக்கிழமை இரவு மீட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞன் சிறுவயதாக இருக்கும் போதே பாரிச வாதம் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டு வாய் பேசமுடியாமலும், ஒரு கால் மற்றும் கை ஒன்றும் செயற்பட முடியாத நிலையில் ஊனமுற்று காணப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பொலிஸாரினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணையின் பின்னர் சனிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -