கிழக்கு மாகாணத்தில் 300க்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்- யோகேஸ்வரன் MP

ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

மது நாட்டில் போர் முடிவுற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் முந்நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக குறிப்பிட்ட அவர் கடத்தியவர்கள் கடந்த அரசாங்க காலத்தில் சுகபோகங்களை அனுபவித்துவந்ததாகவும் நீதியின்முன் அவர்களை அடையாளங்காட்ட தயாரென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை சீகிரிய ஓவியச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் பெயரில் சிறையிலிடப்பட்டுள்ள மட்டக்களப்பு - சித்தாண்டியைச் சேர்ந்த சகோதரியை கருணை மணு மூலம் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைக் கோரவுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையில் 2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் இவற்றை சட்டப்படி கணக்காய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறினார்.

மட்டக்களப்பு –வந்தாறுமூலை கனேஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற மெய்வள்ளுனர் திரனாய்வு இறுதி நகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -