அஜித்தின் என்னை அறிந்தால் முடிந்த கையோடு தனது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு திருமணத்துக்கு தயாராகி வரும் நடிகை திரிஷாக்கு, இன்னும் வாய்ப்புக்கள் குறைந்த பாடில்லை.
ஒரு காலத்தில் வாய்ப்பில்லாமல் உட்கார்ந்திருந்த அம்மணிக்கு, இப்பொழுது மவுசு கொட்டிக் கிடக்கிறது. இன்றுள்ள இளம் நடிகைகளோடும் போட்டி போட்டு தமிழ் சினிமாத் துறையில் நின்று பிடிக்கும் தைரியம் வாய்ந்த நடிகை இவர்தான்.
இப்பொழுது, பூலோகம், அப்பாடக்கர், போகி, லையன் போன்ற படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல், 3 மொழிகளிலும் தயாராகும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியில் அக்ஷைகுமார் காஜல் நடித்த ஸ்பெசல் 26 எனும் படத்தின் தயாரிப்பு உரிமையை தியாகராயன் வாங்கியுள்ளார். இதில் தமிழில் பிரஷாந்தும் தெலுங்கில் ரவிதேஜாவும் நடிக்கிறார்கள். கன்னடம் யாரென முடிவாகவில்லை.
இந்த 3 மொழி தயாரிப்பிலும் நாயகி த்ரிஷா என்பது ஆச்சர்யமானதுதான்.