அஸ்ரப் ஏ சமத்-
முன்னைய அரசினால் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு கொம்பணி வீதியில் உள்ள சிலேவ் ஜலன்ட், யாவா லேன், மஜ்ஜித்தல் ஜாமியா, மலே வீதி, ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களது 470 வீடுகள் உடைக்கப்பட்டன.
தொடர் மாடி வீடுகளுக்காக 9 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு தொடர் மாடி வீடமைப்புத் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது இவ் வீடமைப்புக்காக பாரம் எடுத்த இந்திய டாட்டா கம்பணியின் அனுமதியை இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் நிறுத்தியமையினால் சகல நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேற்படி விடயமாக இன்று செத்சிரிபாயவில் உள்ள நகர அபிவிருத்தி அமைச்சில் கொம்பணி வீதி பிரதேச பிரநிதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பணிப்பாளர்கள் இடையே விசேட கூட்டமொன்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறுகையில்
மேற்படி விடயமாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் இம் மக்களது வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் கொம்பணி வீடமைப்புத்திட்ட பிரச்சினைகள் தீர்த்து வைகப்படும். இக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பிணர்கள், வீடமைப்பு அமைச்சின் உறுப்பிணர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உறுப்பிணர், பிரதேச செயலாளர் உட்பட குழு நியமிக்கப்டும். என நகர அபிவிருத்தி நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தீர்மாணம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனை கவணிப்பதற்காக மேலதிக செயலாளர் ஒருவர் இந்த அமைச்சில் இயங்குவார் எனவும் தெரிவித்தார். இக் குடுபங்களுக்காக தொடர் மாடி வீடுகள் நிர்மாணிக்கும் வரை அவர்களுக்கு வாடகைப்பணம் செலுத்தபட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த வீடுகளை நிர்மாணிக்கவென அரச ஒப்பந்தம் பெற்ற இந்திய டாட்டா கம்பணியின் அனுமதியை இலங்கை முதலீட்டுச் சபை கடந்த வாரம் நிறுத்தியுள்ளது. இதனால் இக்கம்பணி வீடுகள் நிர்மாணிக்கும் பணியை நிறுத்தியுள்ளது. ஆனால் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் அவர்கள் 2 வருடத்திற்குள் இவ் வீடுகளை நிர்மாணித்து கையளிப்பதற்கு ஒப்பந்தமும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கைச்சாத்திட்டுள்ளனர். இதனை இடை நிறுத்தப்பட்டால் அவர்களது தொழிலாளர்கள் மெசினரிகளுக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை நஸ்ட ஈடு வழங்க வேண்டியுள்ளது.
மேற்படி திட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களை குழப்பி வேறு விடயத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கொழும்பு வாழ் மக்களின் வாழ்வாதார வீட்டுப் பிரச்சினைகள் முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது.
ஏற்கனவே இந்த மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் வரை 15,500 ரூபாவில் இருந்து 52,500 ரூபா வரை வாடகைப்பணம் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1பேர்ச் காணிக்கு 4.4 மில்லியன் ரூபா அரச பெறுமதி தீர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை காணிச் சொந்தக்காரர்களது உரிமைக்கு பலர் உள்ளனர். இதனை தனித்தனியாக இனம் கண்டு பிரதேச செயலாளர் ஊடாக உரிமையாளர்களை நாங்கள் அறிய வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனாலேயே நஸ்ட ஈடு பெற முன் வந்தவர்களது பிரச்சினை காலம் தாழ்த்தப்படுகின்றது.
இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில் -
இவ் வீடமைப்புத் திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபை உடைக்கும் போது நான் அப்போது எதிர் கட்சியில் இருக்கும் போது இம் மக்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறேன், அத்தோடு இந்த மக்களது வாழ்வதாரப் பிரச்சினைக்காக நீதிமன்றமும் சென்றுள்ளோம். ஆனால் இறைவன் உதவியினாலவ் இந்த அமைச்சு கிடைத்துள்ளது. தற்பொழுது இந்த அமைச்சுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் முன்னர் அதிகாரிகள் அம்மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஒருவர் குடியிருந்த வீட்டை உடைக்கும் போது நகர அபிவிருத்தி அதிகார முன் கூட்டியே உடைப்பதற்கு முன் வீடுகளை நிர்மாணித்து அம் மக்களை குடியேற்றி விட்டு இப்பிரதேசத்தில் இருந்த வீடுகளை உடைத்திருக்க வேண்டும். இதனால் தான் இந்த மக்கள் மனித உரிமை மீறல், நீதிமன்றமும் சென்றுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த மேல் மாகாணசபை உறுப்பிணர் அர்சத்; இம்மக்கள் தமக்கென வாழ்வதற்கு வீடொன்றை வாடகைக்கு எடுக்கும் போது 1 வருடம் அல்லது 2 வருடம் முற்பணம் கேட்கின்றனர். இதனை இந்த அதிகார சபையே வழங்க வேண்டும் என்றார்.
இந்த 450 வீடுகளது உரிமையாளர்களுக்கும் சொந்தமான வீட்டு உருதிப் பத்திரம் உள்ளவர்கள். இதுவரை இப் பிரதேசத்தில் கொழும்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 9 ஏக்கர் காணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எடுக்கப்பட்டுள்ளன. நிர்மாணப் பணிகளுக்காக வெளி நாட்டு முதலீட்ட கம்பணி ஒப்பந்த காரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ன. கடந்த காலங்களில் இம் மக்களின் பிரச்சினைகளை அமைச்சர்களோ, அதிகாரிகளோ கலந்தாலோசிக்காமல் வீடுகளை உடைத்தணர்.
சிலர் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நஸ்ட ஈடு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். இதுவரை அவர்களுக்குரிய நஸ்ட ஈடு வழங்கப்படவில்லை. மலே வீதியில் பாதுகாப்பு அதிகாரிகளின் குழந்தைகளுக்கான பாடசாலையை வலைத்து சுவர் அமைப்பதற்காக 20 வீடுகள் உடைக்கப்பட்டன. அவர்களுக்கு இதுவரை எவ்வித வீடுகளும் வழங்கப்படவில்லை. இந்த மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இதற்காக சிலர் மனித உரிமை வழக்கு தொடர்ந்துள்ள்னர். இவ்வாறான பல பிரச்சினைகள் அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.