சாதாரண மக்களின் அடிப்படைத்தேவைகளை புறக்கணித்து தனது குடும்பத்தின் ஆடம்பர பகட்டு வாழ்க்கைக்காக நாட்டைச் சூறையாடியதும் நாட்டு மக்களின் தலையில் கடனையும் கஷ்டங்களையும் சுமத்தியதுமே மகிந்த சிந்தனையின் கருப்பொருளாக அமைந்திருந்தது. இதற்கான அத்தாட்சிகளும் அடையாளங்களுமே நாளுக்கு நாள் புதிய நல்லாட்சி அரசினால் வெளிக் கொண்டு வரப்படுகின்றன.
இந்த வரிசையில் கிழக்கிலே மஹிந்தவினால் ஏற்படுத்தப்பட்ட மற்றுமொரு மனிதகுலத்திற்கெதிரான அனர்த்தமே நுறைச்சோலை சுனாமி வீட்டுத்திட்ட முடக்கமாகும்.
கௌரவ கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களின் பணிப்பின் பேரில் சமீபத்தில் அக்கரைப்பற்று நுறைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை பார்வை யிட்டதன் பின்பு கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜனாப். எஸ்.எல்.எம்.பளீல் மேற்கண்டவாறு கூறினார்.

இது மனிதாபிமானத்திற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதியாகும். 2004ம் ஆண்டு சுனாமியினால் புரட்டப்பட்ட மக்கள் இன்னும் போதிய அடிப்படை வீட்டு வசதியில்லாது அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசங்களான மருதமுனை, கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் அவதியுறும் வேளையில் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக அத்தனை வசதிகளோடும் சவூதி அரசாங்கத்தின் நிதிஉதவிகொண்டு நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீட்டுத்திட்டம் மக்களின் பாவனைக்கு வழங்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் பரிபாலிக்கப்படாமல் முட்புதர்களும் காடும் வளர்ந்து காட்சியளிப்பது வேதனையானதும், கண்டிக்கப்படக் கூடியதுமாகும்.
வீடற்ற 1000 குடும்பங்களுக்கு வழங்கப்படக்கூடிய 500 வீட்டு அலகுகள் 100 கோடி ரூபா செலவில் சவூதி அரசினால் 2006ல் நிர்மாணிக்கப் பட்டது. இவ்வளாகத்தில் வைத்தியசாலை,பெண்கள் ஆண்களுக்கான வௌ;வேறான பாடசாலைகள், பள்ளிவாசல்,பொழுது போக்கு மண்டபம், நூலகக்கூடம்,வரவேற்பு மண்டபம்,பஸ் நிலையங்கள்,நீர்வழங்கல் நீர்தாங்கி, உடற்பயிற்சி மைதானம் என்று அத்தனை நவீன வசதிகளோடும் இவ்வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதேவேளையில் நல்லெண்ண அடிப்படையில் அம்பாரை லஹூகலவில் சிங்கள சகோதரர்களுக்காகவும், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்காக திருக்கோயிலிலும் இதேபோன்ற வீட்டுத்திட்டங்கள சமகாலத்தில் அமைக்கப்பட்டன. ஆகவே மேற்படி நுறைச்சோலை வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக பிரத்தியேகமாக சவூதி அரச உதவியுடன் அப்போது வீடமைப்பு அமைச்சராகவிருந்த 'பேரியல் அஷ்ரப்' அவர்களினால் அமைக்கப்பட்டது.
(2)ஆனால் கடந்த அரசாங்கத்தின் தந்திரோபாய அபாயகர, இனவேறுபாட்டுக் கொள்கையினால்தான் தேவையற்ற நீதிமன்ற வழக்குகள் மூலம் மேற்படி வீட்டுத்திட்டம் இழுத்தடிக்கப்பட்டு இன்று வரையும் மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்ற வழக்கானது சட்ட வல்லுனர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் நியாயங்களை முன்நிறுத்தி சமுதாய நன்மைகருதி இலவசமாக வருடக்கணக்கில் வாதாடப்பட்டது. ஆயினும் எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது மாவட்டத்திலுள்ள எல்லா இனமக்களிடையேயும் இவ்வீடுகள் பங்கிட்டு வழங்கப்படவேண்டும் என்ற தீர்ப்பு இறுதியில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீர்க்கமான முடிவில்லாமல் வீடுகள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் அமைச்சர் அதாஉல்லா,உதுமாலெவ்வை போன்றோர் இவ்வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்கும் போதே பேரினவாதிகளோடு சேர்ந்து இதனை எதிர்த்து ஆர்ப்பரித்து இச்சமுதாய நன்மையை கொடுக்கவிடாது தடுத்து வந்தனர். சி.ல.மு.காங்கிரஸ் தலைவரும்,பல சமூக இயக்கங்களும் இதை மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை இதுவரையும் கைகூடவில்லை. இதில் மிகவும் மனவேதனையான செய்தி என்னவென்றால் இத்திட்டத்திற்காக பணஉதவி செய்த சவூதி அரசாங்கம் அத்தனை நிலைமைகளையும் நன்கு தெரிந்திருந்தும் அக்கறையற்று இதில் பாராமுகமாக நடந்துகொள்வதுதான்.
புதிய நல்லாட்சி அரசாங்கத்தில் இப்பிரச்சினை நீதியாக,பாரபட்சமின்றி தீர்த்து வைக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சி.ல.மு.காங்கிரஸ் தலைவரும், செயலாளரும் புதிய அரசாங்கத்தின் உயர்மட்டங்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகளில் அதற்கான உறுதிமொழிகளும் வழங்கப்பட்டுள்ளன. நிலைமைகளை அவதானித்து திட்டத்தின் தற்போதைய அவலநிலையினை அறிந்து கொண்ட இணைப்புச் செயலாளர் ஜனாப். பளீல் இவ்வீடுகளை அவசரமாக பயனாளிகளுக்கு வழங்கி வைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தும் அறிக்கையினை கௌரவ கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களுக்கும், தேசியத்தலைவரும் மாண்புமிகு அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் சமர்ப்பிக்கப் போவதாக உறுதியளித்தார்.