நிஸ்மி கபூர்-
அக்கரைப்பற்று – 12 கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒப்பந்த வேலைகள் மூலம் கிடைத்த நிதியிலிருந்து சங்க அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நுண் கடன் திட்டம் ஒன்றினை செயற்படுத்த வருகின்றது.
இந்த நுண் கடன் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படவர்களுக்கு சுய தொழில் வாய்ப்பிற்கென தலா 20,000.00 ரூபா கடன் வழங்கப்படுகின்றது. நுண் கடன் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று அக்கரைப்பற்று பிரதேசசெயலகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வின்போது நுண் கடன் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.ஷரீப் ஆகியோர் தலா 20,000.00 ரூபாவுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்கள். நிகழ்வில் பிரதேச செயலக பிரதான முகாமைத்துவ உதவியாளர்களான எம்.ஏ.அன்ஸார், எம்.எஸ்.மர்சூக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.