மீரா.இஸ்ஸடீன்-அமைச்சின் ஊடகச் செயலாளா்-
சுகாதார சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சா் எம்.ரீ.ஹஸனலி அரசின் 100 நாள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் விஜயம் மேற் கொண்டாா்.
இதன் போது இவ் வைத்திய சாலைகளில் நிலவும் தேவைகள் மற்றும் குறை பாடுகளை சம்மந்தப்பட்ட அதிகாாிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் மாகாணத்தில் காணப்படும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆதார வைத்திய சாலைக்கும் நிதி யொதுக்கீடும் செய்துள்ளாா்.
மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளை தர முயா்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளதுடன் 100 நாள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும் அதன் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.