குமார் சங்கக்கார புதிய உலக சாதனை!

லங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார். 

உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர் கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில் வென்றதோடு முதலில் துடுப்பெடுத்தாடவும் தீர்மானித்தது. 

இதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்து லகிரு திரிமானே ஏமாற்றமளித்தார். 

எனினும் அடுத்ததாக துடுப் பெடுத்தாட வந்த குமார் சங்கக்கார மற்று மொரு ஆரம்ப வீரரான திலகரத்ன டில்ஷானுடன் இணைந்து ஸ்கொட்லாந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். 

இதன்படி சங்கக்கார சற்று முன்னர் ஒருநாள் போட்டிகளில் தனது 25வது சதத்தைப் பதிவு செய்தார். 

இதன்போது ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்த வீரர் என்ற சாதனை இவர் வசமானது. 

முன்னதாக மெல்போனில் பங்களாதேஷுடன் இடம் பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களையும், வெலிங்டனில் இங்கிலாந்துடன் இடம் பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 117 ஒட்டங்களையும் சிட்னியில் அவுஸ்திரேலியாவுடன் இடம் பெற்ற போட்டியில் 104 ஓட்டங்களையும் சங்கக்கார விளாசியிருந்தார். 

இதே வேளை இன்றைய போட்டியில் சதமடித்து அசத்திய இலங்கை அணி வீரர் டில்ஷான் 104 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது ஒருநாள் போட்டிகளில் இவரது 22வது சதமாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -