பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்மா பள்ளிவாயல் மஹல்லாவில் வசிக்கும் வசதி குறைந்த இரு குடும்பங்களுக்கு சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் வாழ்வாதார உதவியும், மருத்துவ உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு 15-03-2015 நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்மா பள்ளிவாயல் காரியாலத்தில் இடம் பெற்றது.
இதன் போது வாழ்வாதார உதவிக் கொடுப்பணவும்; மருத்துவக் கொடுப்பணவும் சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகிகளும், அதன் ஜமாஅத்தார் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.