அஹமட் இர்ஸாட்- வீடியோ இணைப்பு-
ஏராவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலையத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று 10.03.2015 செவ்வாய்க் கிழமை பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் தலைமையில் நகர்புற பாடசாலைகளின் தரத்துக்கு அமைவாக மிக கோலாகலமாக இடம் பெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதீதியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான அல்-ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அலி சாஹிர் மெளலான, சுபைர் ஆகியோர்களுடன், ஏராவூர் நகர சபை தவிசாளர், சபையின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வளையத்தின் கல்வி அதிகாரிகள், பிரதேசத்தின் ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஏனைய அதீதிகளாக கலந்து சிறப்பித்த அதே வேலையில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் பிரசன்மாயிருந்தனர்.
இங்கு உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், இவ் விளையாட்டுப் போட்டியானது நகர் புற பாடசாலைகளின் தரத்துக்கு ஒப்பானதாக இருக்கின்றமையினை இட்டு தான் பெருமைப்படுவதாக கூறினார். மாவட்டத்தில் தமிழ் கிராமங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதானது மிகவும் மன வேதனைக்குறிய விடயம் என்பதால் என்னுடைய காலப்பகுதியில் என்னால் முடிந்தளவு அவைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்றதுடன், கிழக்கு மாகாண சபையில் கூட்டாச்சி அமைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து எல்லோருமாக கிழக்கு மாகாணத்திலே எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அபிவிருத்தி செய்கின்ற புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார்.
வீடியோ:- இல்ல விளையாட்டுப் போட்டியின் நிகழ்வு:-