ரிசாத் பதியூதினின் அமைச்சுக்குள் அத்து மீறி நுழைந்து கலகம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பிக்குகள் அறுவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே இந்த பிணை உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பேரில் பிக்குகள் இன்று (12) நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஆனால் சந்தேக நபர்களான பிக்குகளை பிணையில் விடுதலை செய்ய எதிர்ப்பு இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்துக்களை பரிசீலித்த நீதவான் சந்தேக நபர்களை தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
எதிர்வரும் ஜூன் 4ம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.