பகற் கொள்ளையடித்த விமல் வீரவன்ச - அம்பலப்படுத்தும் சஜித் பிரேமதாச!

அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சில் 15 இலட்சம் ருபாவுக்கு ஒரு வீடமைப்புத் திட்டம் நிர்மாணித்து அதனை திறக்கும் நிகழ்வுக்காக சகல பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரம், பெனா், போஸ்டா், தொலைக்காட்சி விளம்பரமென 40 இலட்சம் ருபாவை செலவு செய்துள்ளாா். இது தான் அவர் செய்த அபிவிருத்தி. அந்த 40 இலட்சம் ருபாவும் தமது கோலையோ பாழையோவின் சட்டப்பைக்குள் போவதற்காகவும் அரச பணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு வழி வகுத்துள்ளாா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

கொழும்பில் எனது தந்தை ஆர் பிரேமதாசவின் வழிகாட்டலில் நிர்மாணிக்கப்பட்ட சகல தொடா் மாடி வீடுகளுக்கும் வர்ணம் பூசி விட்டு அதற்கு தனது கட்சிக்காரர்களான ஆதரவாளா்களுக்கு நிர்மாண ஒப்பந்தம் வழங்கி கோடிக்கணக்கில் நிதி வழங்கி அந் நிதியை அவா்கள் சூரையாடியுள்ளனா். பொது மக்கள் இதனை என்னிடம் வந்து முறையிடுகின்றனா். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொடா் மாடி வீடுகளிலும் விமல் வீரவன்சவின் பெயரையும் முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் பெயா்கள் கொண்ட நினைவுக்கல்லை பதித்துள்ளாா்.

ஹம்பாந்தோட்டையில் தெஹிக்கலந்த பிரதேசத்தில் 200 பெண்களுக்கு தலா ஒரு இலட்சம் ருபாவை சுயதொழில் மேற்கொள்வதற்காக வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச பகிா்தளித்தாா். அந் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சா் சஜிதர் மேற் கண்ட வாறு தெரிவித்தாா்.

இங்கு அமைச்சா் தொடா்ந்து உரையாற்றுகையில் - 

முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச அவா்கள் சோமாலிய கடற் கொள்ளையா்கள் போன்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் பகற் கொள்ளையடித்துவிட்டு ஊடகங்களில் இலங்கை மத்திய வங்கியின் கொள்ளை பற்றிய உளரித்திரிகின்றாா். சிரச தொலைக்காட்சியின் உரிமையாளாரின் சகோதாரா் இலங்கை மத்திய வங்கியின் தலைவா் அர்ஜூன் மகேந்திரா எனச் சொல்லுகின்றாா். 

எனது அமைச்சின் தனியாா் கம்பணியில் கணக்காய்வு அறிக்கை மேற் கொள்கின்றனா். அம் அமைச்சில் முன்னாள் அமைச்சா் விமல் பாரிய கொள்ளைகளையும் பொதுமக்களின் நிதியையும் வீன் விரயம் செய்து அவரது கட்சிக் காரா்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அந்த அமைச்சினை பாவித்துள்ளாா. 

அரச பொறியற் கூட்டுத்தாபணத்தில் 33 வாகனங்களை மாதாந்த வாடகைக்கு ஒரு தணியாா் கம்பணியில் பெற்று கட்சி இணைப்பாளா்கள், அவரது இன ரீதியாக செயற்படும் இயக்கங்கள், அவரது சீ நியுஸ் விளம்பரம், அதற்காக கட்டிடம் ஊழியா்கள் அனைவரும் அதிகார சபைகளில் சம்பளம், போன்ற வற்றை பெற்றுள்ளாா். அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொழும்பில் தொடா் மாடி வீடுகள் வழங்கியுள்ளாா். 

அவா்களுக்கு அனைவருக்கும் தொழில் வழங்கியுள்ளாா். அது மட்டுமல்ல அவா்களுக்கு வாகனமும் பெற்றுக் கொடுத்துள்ளாா். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மட்டும் 25 இணைப்பாளா்களை நியமித்து வாகனமும் சம்பளமும் வழங்கியுள்ளாா். அவா்கள் சிபாா்சு செய்யும் கட்சி ஆதரவாளா்களுக்கே கானித்துண்டு. வீடமைப்புக் கடன், மற்றும் சகல பழைய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் ஒப்பந்தமும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. 

15 இலட்சம் ருபாவுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்றை நிர்மாணித்தால் அதனை திறக்கும் நிகழ்வுக்காக சகல பத்திரிகைகளிலும் முழுபக்க விளம்பரம் பெனா், போஸ்டா், தொலைக்காட்சி விளம்பரமென 40 இலட்சம் ருபா செலவு செய்துள்ளாா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -